வாக்னர் தலைவர் இறப்பிற்கு ரஷ்யாவை பழிவாங்க களமிறங்கியுள்ள கூலிப்படை வீரர்கள்: வெளியிட்டுள்ள வீடியோ
வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் மரணத்திற்கு பழி வாங்க வாக்னர் படை வீரர்களுக்கு கமெண்டர் டெனிஸ் கபுஸ்டின் அழைப்பு விடுத்துள்ளார்.
எவ்ஜெனி பிரகோஜின் மரணம்
வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் பயணம் செய்ததாக கூறப்படும் எம்ப்ரேயர் 600 வணிக ஜெட் விமானம் ரஷ்யாவின் Tver பிராந்தியத்தில் உள்ள போலோகோவ்ஸ்கி மாவட்டத்தில் தரையில் விழுந்து இரு தினங்களுக்கு முன்பு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வாக்னர் கூலிப்படையின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜன் உடன் சேர்த்து விமானத்தில் பயணம் செய்த 7 பணிகள் மற்றும் 3 விமானக் குழுவினர் என 10 உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் ரஷ்ய படைத்தளபதிகள் எதிர்த்து மாஸ்கோ நோக்கி அணிவகுத்து சென்றதற்காகவே அவரை திட்டமிட்டு ரஷ்யா கொன்று விட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.
அதே சமயம் விமான விபத்து ஏற்பட்ட 24 மணி நேரம் கழித்து வாக்னர் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் குடும்பத்தினருக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்தார்.
After Putin assassinated Prigozhin & Utkin, the Russian Volunteer Corps, an all-Russian military unit fighting for victory for Ukraine and freedom for Russia, commanded by former Russian spetsnaz operators, have offered Wagner mercenaries to join them and march on Moscow together pic.twitter.com/FAC9xdzcQh
— Igor Sushko (@igorsushko) August 24, 2023
ரஷ்யாவிற்கு எதிராக திரளும் வாக்னர் படை
இந்நிலையில் உக்ரைனில் ரஷ்யாவுக்கு ஆதரவாக சண்டையிட்டு வந்த ரஷ்ய கூலிப்படை வீரர்கள், தங்கள் தலைவர் எவ்ஜெனி பிரிகொஜினின்ன் உயிரிழப்பிற்கு பழிவாங்கும் விதமாக அணிமாறி ரஷ்யாவை எதிர்த்து சண்டையிட தயாராகி வருகின்றனர்.
இது தொடர்பாக ரஷ்யாவின் தன்னார்வப் படை தளபதி டெனிஸ் கபுஸ்டின் வீடியோவில் தெரிவித்துள்ள கருத்தில், “ நீங்கள் தற்போது இரண்டு வாய்ப்புகளை மட்டுமே எதிர்கொள்கிறீர்கள்-ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தில் நின்று உங்கள் தளபதிகளை நிறைவேற்றுபவர்களுக்கு காவலாக நிற்பது அல்லது நீங்களே பழிவாங்குவது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பழிவாங்க வேண்டும் என்றால் நீங்கள் உக்ரைன் பக்கம் அணி மாற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மாஸ்கோ நோக்கிய புதிய அணிவகுப்பிற்கு தங்களுடன் வாகனர் வீரர்கள் இணைந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |