எங்கள் வீரர்களை அநியாயமாக இழக்க நான் விரும்பவில்லை: பாக்முட்டிலிருந்து வெளியேறுவதாக வாக்னர் படை தலைவர் அறிவிப்பு
ரஷ்ய மற்றும் உக்ரைனுக்கு இடையே நடைபெற்று வரும் போரில், உக்ரைனின் பாக்முட்டில் ஆயுத பற்றாக்குறையால் வாக்னர் படையினர் வெளியேறவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
பாக்முட்டில் வாக்னர் படை
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுடனான போரில் பாக்முட் எல்லை பகுதியில், முகாமிட்டிருக்கும் வாக்னர் கூலிப்படையினர் ஆயுத பற்றாக்குறையால் மிகவும் சிரமப்படுவதாக தெரிய வந்துள்ளது.
@reuters
வாக்னர் படையில், பலர் ரஷ்ய சிறைகளிலிருந்து ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட குற்றவாளிகளும் இடம் பெற்றுள்ளனர். இந்த படையினர் பாக்முட்டைக் கைப்பற்றுவதற்கான ரஷ்யாவின் முயற்சிகளில் முன்னணியில் உள்ளனர், போரில் இப்படையினர் பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளனர்.
@reuters
இதனால் வாக்னர் மற்றும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் இடையே பதட்டங்கள் நிலவுவதாக தெரிய வந்துள்ளது.
வெளியேறும் வாக்னர் படை
இந்நிலையில் வாக்னர் படை வீரர்கள் ரஷ்யாவின் வெற்றிகளுக்கு பெருமை சேர்த்ததாகவும், உக்ரைனில் வாக்னர் பிரிவுகளின் முன்னேற்றங்களை ரஷ்யா குறைப்பதாகவும் வாக்னர் படை தலைவர் ப்ரிகோஜின் குற்றம் சாட்டியுள்ளார்.
@reuters
’போரில் எங்களுக்கு நிறைய ஆயுத பற்றாக்குறைகள் இருக்கின்றன. எங்களால் அநியாயமாக வீரர்களை இழக்க முடியாது. எனவே நாங்கள் வரும் மே 10ஆம் திகதி பாக்முட் எல்லையிலிருந்து வெளியேறி தனியாக முகாமிட போகிறோம்.'
‘ரஷ்யாவிடம் இருந்து சரியான ஆயுத உதவிகள் கிடைத்தால் நாங்கள் மேலும் போரை தொடர்வோம்’ என வாக்னர் கூலிப்படையின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் டெலகிராம் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கடுமையான விமர்சனம்
மேலும் அவர் வீடியோவில் ’வெடிமருந்து பற்றாக்குறை தீர்க்கப்பட்டால் வாக்னர் வீரர்கள் உயிருடன் இருப்பார்கள்’ என கூறிய அவர், இறந்த சுமார் 30 வீரர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை வீடியோவில் காட்டியுள்ளார்.
@telegram
’பாவிகளே, விலையுயர்ந்த கிளப்புகளில் நீங்கள் உட்கார்ந்து கொள்ளுங்கள், நீங்கள் எங்கள் வாழ்க்கையின் எஜமானர்கள் என்றும், எங்களின் வாழ்க்கையை அப்புறப்படுத்த உங்களுக்கு உரிமை உண்டு என்றும் நினைக்கிறீர்கள்.’
’ராணுவ வீரர்களே இங்கே தன்னார்வலர்களாக வந்து உங்கள் ரெட்வுட் அலுவலகங்களில், சொகுசாக வாழ வேண்டும் என்பதற்காக இறக்கிறார்கள். அதை மனதில் வையுங்கள்.’ என வாக்னர் படை தலைவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.