மிகவும் மட்டமாக அவுட் ஆன இந்திய வீரர்கள்! ஒரே ஓவரில் 2 பேரை காலி செய்த இலங்கை வீரர் வீடியோ
இலங்கை அணிக்கெதிரான போட்டியில், இந்திய அணி வீரர்கள் மிகவும் மோசமாக விளையாடி தொடரை இழந்த நிலையில், சஞ்சு சாம்சன் மற்றும் ருத்ராஜ் கெய்க்வாட் அவுட் ஆகி வெளியேறும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
குறிப்பாக, இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான வஹிண்டு ஹசரங்கா அற்புதமாக பந்து வீசி 4 ஓவரில் 9 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து, 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
The birthday boy, Wanindu Hasaranga is on ?
— Sony Sports (@SonySportsIndia) July 29, 2021
Gets the wicket of Sanju Samson & Ruturaj Gaikwad in the same over ☝?
Tune into Sony Six (ENG), Sony Ten 1 (ENG), Sony Ten 3 (HIN), Sony Ten 4 (TAM, TEL) & SonyLIV now! ?#SLvINDOnlyOnSonyTen #HungerToWin #WaninduHasaranga pic.twitter.com/gBBZLgU6Ex
அதில், குறிப்பாக ஆட்டத்தின் 5-வது ஓவரின் போது, இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான சஞ்சு சாம்சனையும் மற்றும் ருத்ராஜ் கெய்க்வாட்டையும், எல்.பி.டபில்யூ மூலம் அவுட்டாக்கினார்.
பல ஐபிஎல் போட்டிகளில் விளையாடி அசத்தியுள்ள சஞ்சு சாம்சன், ஒரு விளையாட தெரியாத வீரர் போல், ஒரு சுழற்பந்து வீச்சாளரின் பந்தை எப்படி கணித்து ஆட வேண்டும் என்பது கூட தெரியாதது போல் அவுட் ஆக, அவரைத் தொடர்ந்து ருத்ராஜ் கெய்க்வாட்டும், மிகவும் மோசமாக அவுட்டாகினார்.
இதைக் கண்ட இந்திய ரசிகர்கள், ஒரு மட்டமான அவுட் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.