உண்மையை கொண்டுவர உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு காத்திருக்கிறோம்: ஆதவ் அர்ஜுனா
கரூர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கிறோம் என்று தமிழக வெற்றி கழக தேர்தல் மேலாண்மை பொது செயலர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
அவர் கூறியது
நேற்று சென்னை விமான நிலையம் வந்தடைந்த ஆதவ் அர்ஜுனா, "கரூர் விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றி கழக சார்பில் 16 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது வருகிறது.
அதுவரை எங்களால் கருத்து தெரிவிக்க இயலாது. எங்கள் மீதுள்ள நியாங்களுக்கோ அல்லது குற்றச்சாட்டுகளுக்கோ பதில் சொல்ல முடியாத நிலைமையில் இருக்கிறோம்" என்றார்.
மேலும், 16 நாட்கள் கழித்து உண்மையை மக்களுக்கு தெரிவிப்பதாகவும், மக்களை சந்திப்பதற்கான பயண திட்டத்தையும் உருவாக்கி வருவதாகவும் தெரிவித்தார் ஆதவ் அர்ஜுனா.
அதுமட்டுமல்லாமல், எங்களுடைய கட்சியை பலரும் முடக்குவதாக பேசி வரும் நிலையில் ஒரு சாமானியனாக நீதிமன்றத்தை அணுகியுள்ளார் விஜய்.
உண்மையை கொண்டு வருவதற்காக நாங்கள் போராடி வரும் சூழ்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கிறோம் என்றும் கூறினார் ஆதவ் அர்ஜுனா.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |