அமெரிக்க ஜனாதிபதி பைடன் விடுத்த கோரிக்கை: தூதர் தொடர்பில் பிரான்ஸ் முக்கிய முடிவு
நீர்மூழ்கிக்கப்பல் விவகாரத்தில் அமெரிக்காவுக்கான தூதரை பிரான்ஸ் திரும்ப அழைத்திருந்த நிலையில், தற்போது அமெரிக்க ஜனாதிபதி கேட்டுக்கொண்டதை அடுத்து பிரான்ஸ் நிர்வாகம் முக்கிய முடிவினை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் அடிப்படையில், அமெரிக்காவுக்கான பிரான்ஸ் தூதர் அடுத்த வாரம் வாஷிங்டன் செல்ல உள்ளார். புதன்கிழமை ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை தொடர்பு கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரித்தானியா, அவுஸ்திரேலியாவுடன் முன்னெடுத்துள்ள ஒப்பந்தம் தொடர்பில் விவாதித்துள்ளார்.
குறித்த ஒப்பந்தம் காரணம் பிரான்ஸ் பல பில்லியன் டொலர் கப்பல் கட்டுமான ஒப்பந்தத்தை இழக்க இருக்கிறது. தற்போது குறித்த ஒப்பந்தமானது விரிவான விவாதத்திற்கு பின்னர் ஐரோப்பிய கூட்டாளிகளின் கலந்தாலோசனைக்கு பின்னர் முடிவு செய்யப்படும் என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே, இரு தலைவர்களும் எதிர்வரும் அக்டோபர் மாதம் ஐரோப்பாவில் வைத்து சந்திக்கவும் முடிவாகியுள்ளது.