ஃபிஃபா தலைவரின் மறுதேர்தல்... அதிர்ச்சி கொடுத்த வேல்ஸ் கால்பந்து சங்கம்
ஃபிஃபா தலைவருக்கானத் தேர்தலில் மீண்டும் களம் காணும் கியானி இன்ஃபான்டினோவுக்கு அளிக்கப்பட்டிருந்த ஆதரவை வேல்ஸ் கால்பந்து சங்கம் அதிரடியாக விலக்கிக் கொண்டுள்ளது.
அதிர்ச்சி கொடுத்த வேல்ஸ்
Gianni Infantino-வின் மறுதேர்தலுக்கான ஆதரவை உத்தியோகப்பூர்வமாக விலக்கிக் கொண்ட முதல் கால்பந்து சங்கம் வேல்ஸ் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

உலகக் கிண்ணம் தொடருக்கானப் பங்குகளை விற்பனை செய்வதற்கான முயற்சிகளை அவர் ரகசியமாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் உறவினர்களுடன் முன்னெடுத்த நிலையில், இன்ஃபான்டினோவின் தலைமையின் மீதான நம்பிக்கை தகர்ந்தது.
வேல்ஸ் கால்பந்து சங்கம் தெரிவிக்கையில், 2027-2031-ஆம் ஆண்டுக் காலத்திற்கான ஃபிஃபா (FIFA) தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்படுவதற்காக கியானி இன்ஃபான்டினோவின் வேட்புமனு மீதான ஆதரவை விலக்கிக்கொள்வதை இதன் மூலம் உறுதிப்படுத்துவதாக பதிவு செய்துள்ளது.
அத்துடன், நல்லாட்சி, செயல்முறை, தலைமைத்துவம், பங்குதாரர் மேலாண்மை, தகவல் தொடர்பு மற்றும் சரியான முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றில் அண்மையில் ஏற்பட்ட தோல்விகள், உலக கால்பந்து விளையாட்டின் தலைமைப் பொறுப்பில் நீடிப்பதற்கு வேல்ஸ் கால்பந்து சங்கத்தின் நம்பிக்கையை இழக்கச் செய்யும் நிலைக்கு நம்மை இன்ஃபான்டினோ இட்டுச் சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், கால்பந்தின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கத் தவறுவது, எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தோல்வியாகும் என்றும் குறிப்பிட்டு வேல்ஸ் கால்பந்து சங்கம் தங்களது தலைவரைப் பற்றிய நிலைப்பாடு குறித்து ஃபிஃபாவுக்கு (FIFA) கடிதம் எழுதியுள்ளது.
சரிந்த செல்வாக்கு
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் ஸ்பெயினுக்கு உலகக் கிண்ணத்தைக் கையளித்த இரண்டு வாரங்களிலேயே, இன்ஃபான்டினோவின் நற்பெயர் மற்றும் செல்வாக்கு மிக வேகமாகச் சரிந்துள்ளது.
உலகக் கிண்ணம் போட்டிகளை விற்பனை செய்வதற்கான திட்டத்திற்குப் பொறுப்பானவர்களைப் பொறுப்புக்கூறச் செய்வதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, 10 ஆண்டுகளாகப் பதவியில் இருக்கும் இன்ஃபான்டினோவை பதவியிலிருந்து அகற்றுவதற்கான ஐரோப்பிய கால்பந்து அமைப்பின் ஒருங்கிணைந்த முயற்சியில் வேல்ஸ் (Wales) நாடும் இணைந்துள்ளது.

இதனிடையே, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டிய கட்டாயம் இல்லாமலேயே இன்ஃபான்டினோ பதவியிலிருந்து விலகும் வகையிலான அழுத்தத்தை அதிகரிக்க, வேல்ஸ் கால்பந்து சங்கத்தைத் தொடர்ந்து மேலும் பல சங்கங்களும் இதே பாதையைப் பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்பான்டினோ அடுத்த ஆண்டு மீண்டும் போட்டியிடத் திட்டமிட்டிருந்தார், ஆனால் அவரது தலைவர் பதவி தற்போது கடும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.
ஏற்கனவே, இன்ஃபான்டினோ தனது மறுதேர்தல் பிரச்சாரத்தை ஆதரிக்கும் 200-க்கும் மேற்பட்ட ஆதரவுக் கடிதங்களை பெற்றிருந்தார். அதில் தற்போது முதல் நாடாக வேல்ஸ் தனது ஆதரவை விலக்கிக் கொண்டு அதிர்ச்சியளித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |