தினமும் 20 நிமிடம் பின்னோக்கி நடைப்பயிற்சி செய்வதனால் கிடைக்கும் நன்மை என்ன தெரியுமா?
Exercises
By Kishanthini
பின்னோக்கி நடத்தல் அற்புதமான பலன்களைத் தரும் ஒரு பயிற்சியாகும்.
குறிப்பாக 100 அடிகள் பின்னோக்கி நடப்பது 1000 அடிகள் முன்னோக்கி நடப்பதற்கு சமமானது என்று கருதப்படுகின்து. இதனால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது.
அந்தவகையில் பின்நோக்கி நடைபயிற்சி செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
- பின்னோக்கி நடைப்பயிற்சி செய்வதன் மூலம் உடல் இயக்கங்கள் ஒருங்கிணைப்புடன் நடைபெறும். அதனால் உடல் நலம் பெரும். ஒட்டுமொத்த மனநிலையை மேம்படுத்தவும் உதவும்.
- இரவில் சுழற்சி அடிப்படையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் தூக்கம் சீராக வரும். சிந்தனை திறனை மேம்படுத்தும்.
- மனதில் நல்ல யோசனைகள் உதிர்க்க உதவும். பார்வை திறனை மேம்படுத்த துணைபுரியும்.
- பின்னோக்கி நடைபயிலும்போது கால் தசைகளின் வலிமை அதிகரிக்கும்.முழங்கால் காயங்களால் அவதிப்படுபவர்கள் பின்னோக்கி நடைபயிற்சி மேற்க்கொள்வது நல்லது.
- விரைவில் காயங்கள் குணமாகும். நடைப்பயிற்சியை முறையாக மேற்கொள்ளுவதற்கும் வழிவகை செய்யும்.
- உடல் சமநிலையில் இருக்கவும் உதவி புரியும் அதிக கலோரிகளை எரிக்கவும் உதவும்.
- உடல் எடையை சீராக பராமரிக்கவும் பின்னோக்கி நடை பயில்வது பயனளிக்கும்.
- எலும்புகளும், தசைகளும் வழு பெறுவதற்கு பின்னோக்கி நடப்பது நல்லது.
- உடலின் வளர்ச்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கும்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US