ஒரு இந்திய தம்பதியின் திருமணத்துக்காக மூடப்பட்ட Wall Street
பங்குச்சதைகளுக்கு பிரபலமான Wall Streetஐயே தங்கள் திருமணத்துக்காக வாடகைக்கு எடுத்துள்ளார்கள் ஒரு இந்திய தம்பதியர்.
திருமணத்துக்காக மூடப்பட்ட Wall Street
இந்தியர்களான வருண் (Varun Navani) மற்றும் அமண்டாவுக்கு (Amanda Soll) மே மாதம் 25ஆம் திகதி அமெரிக்காவின் நியூயார்க்கில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்கு முந்தைய நாள், அதாவது, மே மாதம் 24ஆம் திகதி, மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சிக்காக பங்குச்சந்தைக்கு பேர்போன பிரபல வால் ஸ்ட்ரீட் என்னும் தெருவில் சுமார் 400 பேர் கூடி ஆடல் பாடலுடன் கொண்டாட்டங்களில் ஈடுபட்டார்கள்.
வால் ஸ்ட்ரீட்டில் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியை நடத்துவதற்காக, 28 வகையான அனுமதிகள் பெறப்பட்டுள்ளன. அதற்காக, சுமார் 25,000 டொலர்கள் முதல் 66,000 டொலர்கள் வரை செலவிடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |