முகேஷ் அம்பானிக்கு இல்லை! சன் குழுமத்திற்கு விற்கும் வால்ட் டிஸ்னி? வெளியான தகவல்
வால்ட் டிஸ்னி தனது இந்திய வர்த்தகத்தை மொத்தமாக சன் குழுமம் அல்லது கௌதம் அதானி விற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வால்ட் டிஸ்னி
உலகின் பிரபலமான வால்ட் டிஸ்னி நிறுவனம், ஸ்ட்ரீமிங் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்த முடியாமல் திணறி வருகிறது.
இந்தியாவில் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தை இழந்தது டிஸ்னி ஹாட்ஸ்டாருக்கு பாரிய அடியாக பார்க்கப்பட்டது.
இதன் காரணமாக இந்திய வர்த்தகத்தை விற்க வால்ட் டிஸ்னி திட்டமிட்டுள்ளது. இதற்காக சில நாட்களுக்கு முன்பு முகேஷ் அம்பானியிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக செய்தி வெளியானது.
கலாநிதி மாறன்-கௌதம் அதானி
இந்திலையில் சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் கௌதம் அதானியிடம் வால்ட் டிஸ்னி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இருக்கும் ஸ்ட்ரீமிங் மற்றும் டிவி வர்த்தகத்தை மொத்தமாகவோ அல்லது பகுதி பகுதியாகவோ (ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பு உரிமம், பிராந்திய டிஸ்னி + ஹாட்ஸ்டார்) விற்க வால்ட் டிஸ்னி தயாராகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |