உலகின் பெரும் கோடீஸ்வர குடும்பம்... அதில் மூவரின் சொத்து மதிப்பு எலோன் மஸ்கை விட அதிகம்
அமெரிக்காவில் உள்ள வால்டன் குடும்பம், உலகின் பெரும் கோடீஸ்வர குடும்பங்களில் ஒன்று. இந்த குடும்பத்தில் மூவரின் சொத்து மதிப்பு உலகின் பெரும் கோடீஸ்வரரான எலோன் மஸ்கை விடவும் அதிகம்.
வால்மார்ட் நிறுவனம்
வால்டன் குடும்பத்தில் பிரபலமான மூன்று உறுப்பினர்களின் மொத்த சொத்து மதிப்பு என்பது 400 பில்லியன் டொலருக்கும் அதிகம் என்றே கூறப்படுகிறது. உலகின் பெரும் கோடீஸ்வரரான எலோன் மஸ்கின் தற்போதைய சொத்து மதிப்பு 364 பில்லியன் டொலர் என்றே தெரிய வந்துள்ளது.
இதனால் வால்டன் குடும்பம் பூமியிலேயே பொருளாதார ரீதியாக மிகவும் சக்திவாய்ந்த குடும்பங்களில் ஒன்று என அறியப்படுகிறது. ஆண்டு வருவாயின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய நிறுவனமான வால்மார்ட்டில் வால்டன் குடும்பத்தினருக்கு 47 சதவிகித பங்குள்ளது.
1962 ல் சாம் வால்டன் மற்றும் இவரது சகோதார் பட் வால்டன் ஆகியோரால் நிறுவப்பட்ட வால்மார்ட், 19 நாடுகளில் 10,500 க்கும் மேற்பட்ட கடைகளை இயக்கி, சில்லறை வணிக சாம்ராஜ்யமாக வளர்ந்துள்ளது.
மட்டுமின்றி, 2.1 மில்லியனுக்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய தனியார் நிறுவனமாகவும் வால்மார்ட் மாறியுள்ளது. ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள பில்லியனர்கள் குறியீட்டின் படி, உலக அளவில் 11வது பெரும் கோடீஸ்வரராக சுமார் 120 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் ஜிம் வால்டன் உள்ளார்.
சுமார் 117 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் 12வது இடத்தில் ரோப் வால்டன் உள்ளார். 13வது இடத்தில் 117 பில்லியன் டொலர்கள் சொத்து மதிப்புடன் ஆலிஸ் வால்டன் உள்ளார்.
41.3 பில்லியன் டொலர் சொத்துக்களுடன் 37வது இடத்தில் லூகஸ் வால்டன் உள்ளார். 18.8 பில்லியன் சொத்துக்களுடன் 116வது இடத்தில் கிறிஸ்டி வால்டன் உள்ளார். வால்டன் குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு என்பது 432 பில்லியன் டொலர் என்றே கூறப்படுகிறது.
இதில் சாம் வால்டனின் மகன் ஜான் வால்டன் கடந்த 2005ல் விமான விபத்தில் கொல்லப்பட அவரது மனைவி கிறிஸ்டி வால்டன் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்தார். 2024ல் வால்மார்ட் நிறுவனத்தின் மொத்த வருவாய் என்பது 648 பில்லியன் டொலர் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |