சத்துணவு உப்புமாவுக்கு பதில் பிரியாணியும் பொரிச்ச கோழியும் வேணும்.., சிறுவனின் பேச்சுக்கு அமைச்சரின் ரியாக்சன்
அங்கன்வாடி சத்துணவில் உப்புமாவுக்கு பதில் பிரியாணியும், பொரிச்ச கோழியும் வேண்டும் என சிறுவன் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
சிறுவனின் வேண்டுகோள்
இந்திய மாநிலமான கேரளாவைச் சேர்ந்த சிறுவன் சாங்கு. இந்த சிறுவனுக்கு பிரியாணி என்றால் பிடிக்கும். ஆனால், அங்கன்வாடி சத்துணவில் அடிக்கடி உப்புமா வழங்குகின்றனர். இது சாங்குவுக்கு பிடிக்கவில்லை.
இதனால், "அங்கன்வாடி சத்துணவில் உப்புமாவுக்கு பதில் பிரியாணியும், பொரிச்ச கோழியும் வேண்டும்" என்று சிறுவன் பேசியதை அவரது தாயார், வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், கேரளாவின் சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கவனத்திற்கு சென்றது. அவரும், அங்கன்வாடி உணவு பட்டியல் மறுபரிசீலனை செய்யப்பட்டு பிரியாணி சேர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சிறுவன் மற்றும் அவரது தாயாருக்கு அமைச்சர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிறுவனின் தாயார் கூறுகையில், "சாங்குவின் வீடியோ வைரலான நிலையில் பலரும் போன் செய்து சாங்குவுக்கு பிரியாணி மற்றும் பொரித்த கோழி வழங்க முன்வந்துள்ளனர்’’ என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |