இந்தியாவில் பாதுகாப்பான SUV கார் வாங்க வேண்டுமா? இந்த 2 கார்கள் தான் முதலிடத்தில்
இந்தியாவில் SUV கார்களின் விற்பனை அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பான SUV கார் எது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பாதுகாப்பான SUV கார்
உள்நாட்டில் விற்பனையாகும் மொத்த கார்களில் 50 சதவிகிதத்திற்கும் மேல் SUV கார்கள் தான் விற்பனையாகின்றன.
இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் SUV கார்களின் பிரபலம் மக்கள் மத்தியில் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
இதில் பாதுகாப்பான கார்களின் பட்டியலில் Tata Punch, Tata Nexon, Volkswagen Tiguan, Skoda Kushak, Mahindra Scorpio-N போன்ற கார்கள் இல்லை. பொதுவாகவே SUV கார்கள் பாதுகாப்பானது என்று நாம் நினைத்தாலும் சர்வதேச NCAP ரேட்டிங்கின் படி நமக்கு முழுமையான பாதுகாப்பை கொடுத்ததில்லை.
இந்தியாவிலேயே அதிக பாதுகாப்பான SUV கார் என்றால் டாடா சஃபாரியும் (Tata Safari) டாடா ஹேரியர் (Tata Harrier) காரும் தான். இந்த இரண்டு கார்களுமே ஒரே ரேட்டிங்கைப் பெற்றுது.
மேலும், இந்த இரண்டு கார்களும் OMEGARC உள்கட்டமைப்பு அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது Land Rover D8 பிளாட்ஃபார்மிலிருந்து பெறப்பட்டுள்ளது.
முக்கியமாக இந்த கார்களில் 6 airbags, electronic stability control ஆகிய வசதிகள் உள்ளன. பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் என இரண்டு பிரிவினரும் பயணம் செய்வதில் இந்த இரண்டு கார்களும் NCAP ரேட்டிங்கின் படி 5 நட்சத்திரங்களை பெற்றுள்ளது.
அதாவது, இந்த இரண்டு SUV கார்களுமே பெரியவர்கள் பாதுகாப்பில் 34 புள்ளிகளுக்கு 33.05 புள்ளிகளும் சிறியவர் பாதுகாப்பில் 49 புள்ளிகளுக்கு 45 புள்ளிகளும் பெற்று முதலிடத்தில் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |