தொங்கும் தொப்பையை எளிய முறையில் கரைக்க வேண்டுமா? இந்த பயிற்சிகளை செய்தாலே போதும்!
இன்றைய மக்களை அதிகமான மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும் ஒர் பிரச்சினை என்னவென்றால், அது தொப்பை தான், ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருமே இந்த பிரச்சினையால் மிகவும் அவதிப்படுகின்றார்கள்.
அதிகளவு கொழுப்புள்ள உணவுகளை உண்பதால், உடலில் கொழுப்பு சேர்கிறது. குறிப்பாக அடி வயிற்றில் தேவையில்லாத சதையாக தங்குகிறது.
இதனை கரைக்க ஒரு சில உடற்பயிற்சி உதவுகின்றது. தற்போது அது என்னென்ன என்பதை பார்ப்போம்.
அப்பர் ஆப் கன்ட்ரோல்
தரையில் கால்களை நேராக நீட்டிப் படுக்க வேண்டும். கால் முட்டியை மடக்கிவைக்க வேண்டும். தலை மற்றும் மேல் உடலை உயர்த்தி, கைகளால் முட்டியைத் தொட வேண்டும்.
இந்த நிலையில் சில விநாடிகள் இருந்துவிட்டு, பழையநிலைக்குத் திரும்ப வேண்டும். இப்படி, மூன்று முறை செய்ய வேண்டும்.
மேல் வயிற்றுப் பகுதி கொழுப்பைக் குறைக்கும். முதுகுத்தண்டு மற்றும் கால் பகுதிகளில் உள்ள சதைப் பிடிப்புகள் நீங்கும்.
லோயர் ஆப் கன்ட்ரோல்
பயிற்சி 1
தரையில் கால்களை நீட்டி நேராகப் படுக்க வேண்டும். கைகளை இடுப்புக்குப் பின்புறமாகக் கீழே வைக்க வேண்டும்.
இப்போது, கால்களை சற்று அகட்டியபடி 45 டிகிரியில் ஒரே சீராகத் தூக்கி, சில விநாடிகள் அதேநிலையில் இருக்க வேண்டும். பின்னர், பழையநிலைக்குத் திரும்பலாம். இதை மூன்று முறை செய்யலாம்.
பயிற்சி 2
தரையில் கால்களை நீட்டி நேராகப் படுக்க வேண்டும். கைகளை பக்கவாட்டில் தரையில் பதிக்க வேண்டும்.
இப்போது கால்களை 90 டிகிரி கோணத்தில் உயர்த்தி, ஐந்து விநாடிகள் அப்படியே இருந்துவிட்டு, இயல்புநிலைக்குத் திரும்பலாம். இதை மூன்று முறை செய்ய வேண்டும்.
கீழ் வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைக்கும். சதைப்பகுதியை உறுதியாக்கும். கீழ் உடல் பகுதியில் இருந்து மேல் உடலுக்கு ரத்த ஓட்டம் சீராகப் பாயும். தொடைப் பகுதி ஃபிட் ஆகும்.