முகத்திற்கு உடனடி பொலிவு கிடைக்கணுமா? இந்த பேக்கை முகத்திற்கு போட்டாலே போதும்
பொதுவாக பழங்காலத்தை விட இக்காலத்தில் தான் அதிக சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
இதற்கு மோசமான சுற்றுச்சூழல் மட்டுமின்றி, ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களும், ஆரோக்கிய பிரச்சனைகளும் தான் காரணம்.
முகப்பரு, கரும்புள்ளிகள், வறட்சியான சருமம் போன்றவற்றால் பொலிவிழந்த மற்றும் அசிங்கமான முகத்தை பலரும் பெறுகிறோம்.
அந்தகாலத்தில் நம் முன்னோர்கள் தங்களது அழகை மேம்படுத்த எந்த ஒரு கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்களையும் பயன்படுத்தவில்லை. மாறாக இயற்கைப் பொருட்களைக் கொண்டு தான் தங்களது சருமத்தைப் பராமரித்தார்கள்.
அந்தவகையில் சருமத்தை இயற்கைமுறையில் பொலிவுடன் வைத்து கொள்ள உதவும் ஒரு சூப்பரான பேக் ஒன்றை எப்படி செய்யலாம் என இங்கு பார்ப்போம்.
தேவையானவை
- க்ரீன் டீ - ஒரு பேக்
- சுடுநீரை - அரை கப்
- தயிர் - ஒரு டேபிள் ஸ்பூன்
- ரெட் ஒயின் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் அரை கப் சுடுநீரில் க்ரீன் டீ பேக்கைப் போட்டு சில நிமிடங்கள் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் அதில் தயிர் மற்றும் ரெட் ஒயினை சேர்த்து நன்கு ஒருசேர கலக்க வேண்டும். இந்த கலவைவை நன்கு பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு அந்த கலவையை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்யவும்.
30 நிமிடம் நன்கு ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் முத்தைக் கழுவவும்.
இந்த ஃபேஸ் பேக்கில் ஒயின் சேர்ப்பதால், அது சருமத்தை பிரகாசமாக வெளிக்காட்டும்.
ஏனெனில் இதில் உள்ள ரெஸ்வெராட்ரோல் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிஃபீனால்கள், சருமத்தில் முதுமைத் தோற்றத்தைத் தடும் முதுமைக் கோடுகளையும், சுருக்கங்களையும் தடுத்து, சருமத்தில் இரத்த ஓட்டம் மற்றும் அதன் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து இளமைத் தோற்றத்தைத் தரும்.