ஒற்றை தலைவலியை எளிதில் போக்க வேண்டுமா? இதோ சில இயற்கை மருத்துவ குறிப்புகள் !!
இன்றைய இயந்திர வாழ்க்கையில் ஒற்றை தலைவலி பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இது வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் வரும் பிரச்சினைகளில் ஒன்று.
தூக்கமின்மை, காலநேரம் தவறி உணவு அருந்துதல், அஜீரண கோளாறு, தேவையற்ற சிந்தனை, மன உளைச்சல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒற்றை தலைவலி வருகின்றது. அதுமட்டுமின்றி கம்ப்யூட்டர், மொபைல் போன் அதிக நேரம் பார்ப்பது, காற்றோட்டம் இல்லாத அறையில் அருப்பது, சில வாசனைகளை நுகர்வது புான்ற காரணங்களாலும் தலைவலி ஏற்படுகின்றது.
இதனை எளியமுறையில் நீக்க அடிக்கடி மருந்துகளை தான் போட வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து கூட எளிய முறையில் இயற்கை வைத்தியம் பார்க்க முடியும். தற்போது அவை எப்படி என பார்ப்போம்.
- குளிர்ந்த நீரில் கால்களை வைத்து, சூடான பாட்டில் நீரை தலைக்கு பின்புறம் வைப்பதின் மூலம், தலைவலியை கட்டுப்படுத்த முடியும்.
- பத்து கிராம்பையும், ஒரு கடுக்காயின் தோலையும் நைத்து ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி, தேவையான அளவு சர்க்கரை சேர்த்து ஓரளவு சூட்டில் குடிக்கலாம்.
-
நொச்சி இலையைக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து அந்தச் சாறை, இரண்டு பக்க நெற்றிப் பொட்டுகளிலும் நன்கு பூசினால் தலைவலி குறையும்.
-
இஞ்சிச் சாறு, பால், நல்லெண்ணெய் ஆகியவற்றைச் சம அளவு கலந்து காய்ச்சி வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம்.
-
அரைத்தேக்கரண்டி கடுகுப் பொடியை முன்று தேக்கரண்டி தண்ணீரில் கலந்து இந்த கரைசலை மூக்கில் விட ஒற்றை தலைவலி தீரும்.
-
பூண்டையும், மிளகையும் தட்டிப்போட்டு நல்லெண்ணெயில் சேர்த்து காய்ச்சி ஆறின பிறகு தலையில் தேய்த்து குளித்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
- விட்டமின் நியாசின் அதிகமுள்ள உணவு வகைகளான முழுகோதுமை, ஈஸ்ட், பச்சை இலையுடன் கூடிய காய்கறிகள், சூரியகாந்தி விதைகள், கொட்டைகள், தக்காளி, ஈரல், மீன் போன்றவற்றை உண்ண வேண்டும்.
-
ஒற்றை தலைவலி குணமாக மருதோன்றி இலையை மை போல அரைத்து, இரு பக்க நெற்றிப் பொட்டுகளிலும் கனமாகப் பற்று போட்டால் உடனே தலைவலி நின்றுவிடும். இது கை கண்ட அனுபவ முறை.