ஒரே நாளில் பித்த வெடிப்பு நீங்க வேண்டுமா? இதோ சில அசத்தலான டிப்ஸ்
உங்கள் குதிகால் விளிம்பைச் சுற்றியுள்ள தோல் வறண்டு தடிமனாக மாறும்போது குதிகால் விரிசல் ஏற்படலாம்.
மேலும் குதிகால் கீழ் உள்ள கொழுப்புத் திண்டின் மீது அழுத்தம் அதிகரிப்பதால் சருமம் பிளவுபடும். உடல் பருமன், செருப்பு போன்ற திறந்த ஹீல் காலணிகளை அணிவது மற்றும் குளிர்ந்த, வறண்ட சருமம் போன்ற பல காரணிகள் குதிகால் விரிசல் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கலாம்.
இதனை புறக்கணிப்பதால் ஏற்படும் அபாயங்கள். உலர்ந்த, விரிசல் அடைந்த குதிகால்களை புறக்கணிக்கணிப்பதனால் காலப்போக்கில் அது ஆழமான பிளவுகளை உருவாக்கலாம்..இது உங்கள் தொற்று அபாயத்தை பல பின்விளைவுகளை அதிகரிக்கிறது.
ஆகையால் நாம் நமது கைகள் குறித்து கவனமாக இருப்பது போல கால்கள் மற்றும் பாதங்களையும் பேணிப்பாதுகாத்தல் அவசியம்.
அந்தவகையில் குதிகால் வெடிப்பினை எப்படி சரி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
குதிகால் வெடிப்பினை இயற்கை வழியில் எவ்வாறு சரி செய்யலாம்?
- குதிகால் வெடிப்பினை சரி செய்வதற்கு சோறு வேகவைத்த தண்ணீரை ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற்றிக்கொள்ள வேண்டும்.
- பின் வேறாக ஒரு நாட்டு நெல்லிக்காய் அளவு சாதத்தை போட்டுக்கொள்ள வேண்டும்.போட்டு மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும்.
- சுண்ணாம்பு மூன்றையும் அரைத்து ஒரு பேஸ்ட் போல தயாரித்து வைத்துக்கொள்ளுங்கள்.
- சோற்று தண்ணீரில் காலை சுத்தமாக கழுவிய பின்பு மெல்லிய சூட்டில் வைத்து பின் சூடு ஆறும் வரை காலை வைத்துவிட்டு வெளியில் எடுத்து துடைத்து விட்டு பின்,சுண்ணாம்பு சோற்றுடன் சேர்த்த பேஸ்டினை கால்களில் பூசி அதனை வைத்திருந்து பாதத்தை கழுவ வேண்டும்.
- இவ்வாறு தொடர்நது 5 நாட்கள் செய்தாலே பித்த வெடிப்பு நீங்கும்.