மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலியை போக்க வேண்டுமா?
பொதுவா மாதாந்தம் பெண்கள் எதிர்கொள்ளும் மாதவிடாய் கால வயிற்றுவலி என்பது ஒரொருவரின் வலி தாங்கும் சக்தியைப்பொறுத்தே காணப்படுகிறது.
இந்தகாலங்களில் பெண்களுக்கு உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்கள் ஏற்படுகின்றன. மாதவிடாயின் போது அதிக சக்தியிழப்பு ஏற்படுவதால் பெண்கள் சோர்வாகவும், எரிச்சலாகவும் இருப்பர்.
குறிப்பாக பதின்பருவம் எனப்படும் (டீன்ஏஜில்) இந்த வலி அதிகமாகவே இருக்கும். காரணம் ஹார்மோன் சமநிலையின்மை, உணவுப்பழக்கமுறை, சத்தில்லாத உணவுகளை உட்கொள்ளுதல் என்பவையாகும். மாதவிடாய் கால வலியை போக்குவதற்கான ஒருசில வழிமுறைகள் இருக்கின்றன.
ப்ரேட்டாக்லான்டிஸ் எனப்படும் உள்ளுறுப்பே வலி உணரும் தன்மையை கொடுக்கிறது. இந்த இயற்கையான வீட்டில் தயாரிக்கப்படும் மருந்தை அருந்தும்போது ப்ரேட்டாக்லான்டிஸின் செயற்பாட்டை அதனால் குறைக்கமுடியும்.
- மோர் எடுத்துக்கொள்ளுங்கள்.மோரோடு வறுத்தெடுத்து (பொடியாக்கப்பட்ட) வெந்தயத்தையும், அத்தோடு பெருங்காயம் 2 ஐயும் இஞ்சி,கொத்தமல்லி இவை அனைத்தையும் இடித்து சிறிது உப்பு சேர்த்து பானமாக பருகினால் வலி நீங்கும்.
- இஞ்சி வலி நிவாரணியாகவும்,வெந்தயம் மாதவிடாயின் போது தசைகள் இறுக்கமாக இருப்பதை தளர்வாக வைக்கவும்,பெருங்காயமானது வாயு சம்பந்தமான பிரச்சினைகளை நீக்கவும் உதவும்.
- இரும்பு சத்து உள்ள உணவுகளான சிவப்பு இறைச்சி,பச்சை காய்கறிகள் மற்றும் கீரைவகைகள்,உலர்ந்த விதைகளான வால்நட்ஸ், பிஸ்தா, கொடி முந்திரி, பீச் பழங்கள், உலர்ந்த திராட்சை மற்றும் உலர்ந்த ஆப்ரிகாட் பழங்கள் போன்றவற்றையும் முந்திரி பருப்பு,பாதாம் பருப்பு, உலர்ந்த பழங்கள் மற்றும் பேரீச்சம் பழம் போன்றவற்றில் இரும்புச் சத்து அதிகளவில் காணப்படுகிறது. எனவே மாதவிடாய் நேரங்களில் இரும்பு சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ளுவது வலி தாங்கும் சக்தி அளிக்கும்.
- சூடான ஹாட் வாட்டர் பேக் எனப்படும் பையை வலி இருக்கும் இடத்தில் வைத்தால் வலி குறையும்.
- சமையலறையில் முக்கிய பொருட்களாக இருக்கும் கறுவாப்பட்டை சீரகம் போன்றவற்றை அரைத்து பொடியாக்கி சுடுத்தண்ணீரில் கலந்து காலையிலும், மாலையிலும் உணவுக்கு முன் பருகினால் வலி நீங்கும்.