கைகளில் உள்ள கொழுப்பை கரைக்க வேண்டுமா? இந்த உடற்பயிற்சிகளை மறக்கமால் செய்து வாங்க போதும்!
பொதுவாக ஒரு சிலருக்கு கைகள் மட்டும் பருமனாக இருக்கும், அது தோற்றத்தை பாதிக்கும் வகையில் இருக்கக்கூடும்.
கைகளில் உள்ள கொழுப்பை குறைக்கும் உடற்பயிற்சிகள் உள்ளன. தற்போது அதில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
புஷ்-அப்கள்
வயிற்றுப்பகுதி தரையில் இருப்பது போல படுத்து, உங்கள் உள்ளங்கைகளை தோள்பட்டைக்கு நேராக இருக்கும்படி வைத்து, தரையில் ஊன்றிக் கொள்ளவும். மூச்சை ஆழமாக இழுக்கவும்.
மூச்சை வெளிவிடும் போது, உங்கள் மார்புப்பகுதி, வயிறு மற்றும் தொடைகளை கொஞ்சம் மேலே உயர்த்தவும். கைகளும் கால்களும் உங்களை பேலன்ஸ் செய்ய உதவும். மூச்சை நன்றாக உள்ளிழுத்து, உடலை மறுபடி கொஞ்சமாக கீழே இறக்கவும்.
உடல் தரையைத் தொடக் கூடாது. மீண்டும் மூச்சை வெளிவிடும் போது, உடலை மேலே உயர்த்தவும். (உங்களால் முடிந்த அளவுக்கு உயர்த்தலாம்), இதை 5 – 10 முறை செய்யவும்.
உங்களால் கை மற்றும் கால்களை மட்டும் ஊன்றி பேலன்ஸ் செய்ய முடியவில்லை என்றால், முட்டியை தரையில் வைத்து, அதற்கு மேற்பகுதி உடலை மேலே உயர்த்தி பயிற்சி செய்யலாம். அல்லது, சுவற்றில் கைகளை ஊன்றி இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம்.
கேட்-கௌ (Cat-Cow stretch) ஸ்ட்ரெட்ச்
சமதளத்தில், குழந்தை முட்டி போடுவது போன்று அமர்ந்து, உங்கள் கைகளை தரையில் ஊன்றிக் கொள்ளுங்கள். உங்கள் மணிக்கட்டுகள் தோளுக்கு நேராக இருக்க வேண்டும் மற்றும் கால் முட்டி இடுப்புக்கு கீழே சரியான நிலையில் இருப்பதை உறுதி செய்யுங்கள்.
நன்றாக மூச்சை உள்ளிழுத்து, வயிற்றுப்பகுதியை தளர்வாக்கி, தரையை நோக்கி மெதுவாக உங்கள் உடலை வளையுங்கள்.
அதே நேரத்தில், நீங்கள் மேலே பார்க்கும் படி, தலையை உயர்த்த வேண்டும். இந்த நிலையில் 2 – 3 நொடிகள் இருக்க வேண்டும். மூச்சை வெளியே விட்டபடி, வளைந்திருக்கும் உடலை மெதுவாக மேற்புறமாக நகர்த்தும் அதே நேரத்தில், அண்ணாந்து பார்க்கும் தலையை தழைத்து உங்கள் தாடை, மார்பைத் தொட வேண்டும்.
இதனை நாள் ஒன்றிற்கு 20 முதல் 25 முறை வரை செய்யலாம். உங்களுக்கு ஆதரவாக, கைகள் ஊன்றி இருக்கும், இது கைகளின் தசைகளை வலுப்படுத்தி, கூடுதல் கொழுப்பை அகற்றி மற்றும் தளர்வாக இருக்கும் தசையை இறுக்கமாக்கும்.
செஸ்ட்-ப்ரஸ் (Chest Press)
தரையில் முதுகுப்புறமாக படுத்துக் கொள்ளவும் .
உங்கள் முட்டியை மடக்கி, பாதங்களை கொஞ்சம் அகலமாக வைக்கவும்.
கைகளில் எடைகளை பிடித்திருக்கும் போது, கைகளை மேற்புறமாக நீட்டித்து, மறுபடி கீழே இறக்கவும்.