கல்லீரல் கொழுப்பை எளியமுறையில் கரைக்க வேண்டுமா? சில இயற்கை வழிகள் இதோ
பொதுவாக கல்லீரல் நமது உடலை சுத்திகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இது நாம் சாப்பிடும் உணவில் நல்லவை மற்றும் கெட்டவை எது என தரம் பிரித்து வெளியேற்றும் வேலையை செய்கிறது.
கல்லீரல் நமது உடலில் பல இயக்கங்களை கவனித்துக் கொள்கிறது. இது சரியாக செயல்படாத நேரத்தில் நமது உடலில் பல இயக்கங்கள் பாதிக்கப்படும்.
குறிப்பாக கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு படியும் பொழுது அது மிகப்பெரிய உடல்நல பிரச்சனையாக மாறும் வாய்ப்புகள் அதிகம்.
கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு தேக்கம், கல்லீரல் அழற்சி, கல்லீரல் சேதம் மற்றும் காயங்களை உண்டாக்கும் வாய்ப்பு உள்ளது. இது கல்லீரல் செயலிழப்புக்கு வழி வகுக்கிறது.
எனவே இவற்றை ஆரம்பத்திலே போக்குவது நல்லது. அதற்கு ஒரு சில இயற்கை வழிகள் உள்ளது . அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
image - tiresandparts
- கோதுமை புல்லில் அதிகமான குளோரோபில் அடங்கியுள்ளது. இது உடலில் உள்ள நச்சுத்தன்மையை போக்க உதவுகிறது. இதன் மூலம் ஆரோக்கியமான கல்லீரலை பாதுகாக்க இது உதவி புரிகின்றது.
- பீட்ரூட்டில் நைட்ரேட்ஸ் மற்றும் பீட்டாலைன்கள் என்ற ஆன்டிஆக்ஸிடன்டுகள் உள்ளது. இதன் மூலம் ஆக்ஸிடேட்டிவ் டேமேஜ் மற்றும் கல்லீரல் வீக்கம் போன்றவற்றை சரி செய்கின்றது.
- சிகப்பு மற்றும் ஊதா நிற திராட்சைகள் இது உங்களின் ஆன்டிஆக்ஸிடன்ட் அளவை உயர்த்துவது மட்டுமின்றி, கல்லீரலில் ஏற்படும் வீக்கங்களை குறைக்கிறது.
- காளிஃப்ளவர், ப்ரோக்கோலி கல்லீரலுக்கு நல்லது.இவை கல்லீரலின் இயற்கையான நச்சு நீக்கும் என்சைம்களை அதிகப்படுத்துவது மட்டுமின்றி, கல்லீரல் சேதமடைவதில் இருந்து பாதுகாக்கிறது.
- நட்ஸ் வகைகளிலேயே கல்லீரலுக்கு அதிக நன்மை விளைவிக்க கூடியது வால்நட்ஸ் தான். இது கொழுப்பு நிறைந்த கல்லீரலை கே குறைப்பதற்கு உதவுகிறது.