பானை போன்று இருக்கும் தொப்பையை இருமடங்கு வேகத்தில் குறைக்க ஆசையா? இந்த சூப்பரான பானங்களை குடித்தாலே போதும்
Cholestrol
Weight Loss
By Balamanuvelan
தொப்பை பலருக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது. இதனை பலர் தொப்பை மற்றும் உடல் எடையை குறைப்பதற்கு ஜிம், டயட் போன்றவற்றை மேற்கொள்கின்றனர்.
பெரும்பாலானோர் தொப்பை விரைவில் குறைய வேண்டுமென்று கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்வார்கள்.
அவ்வாறு மேற்கொள்வதால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. அதற்கு பதிலாக உடலுக்கு கேடு தான் விளையும்.
எனவே தொப்பை குறைக்க ஒரு சில பானங்கள் பெரிதும் உதவுகின்றது. தற்போது அவற்றை பார்ப்போம்.
- 2 கப் நீரை கொதிக்க வைத்து இறக்கவும். பின் அந்த நீரில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள், 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, 5 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும். பின் அதை குடிக்க வேண்டும். இந்த டீயை தினமும் குடித்து வந்தால், எடை வேகமாக குறையும்.
- ஒரு நாளைக்கு 2-3 முறை குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்த இஞ்சி டீயை தயாரிப்பதற்கு 2 கப் நீரை ஒரு பாத்திரததில் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் துருவிய இஞ்சியை சேர்த்து குறைவான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின் அதை வடிகட்டி, அதில் தேன் மற்றும் 1/2 எலுமிச்சையைப் பிழிந்து கலந்து குடிக்க வேண்டும். இது உடலின் மெட்டபாலிசத்தை பாதித்து, எடை இழப்பிற்கு உதவும்.
- ஒரு கப் நீரை நன்கு கொதிக்க வைத்து இறக்கி, அந்நீரில் எலுமிச்சை சாறு மற்றும் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். அது உடலில் மெட்டபாலிசத்தை வேகப்படுத்தி, உடல் கொழுப்பை எரிக்கும்.
- ஒரு கப் நீரை நன்கு கொதிக்க வைத்து இறக்கி, அதில் சிறிது பட்டைத் தூளை சேர்த்து 10 நிமிடம் மூடி வைத்து, பின் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இது உடலில் உள்ள கொழுப்பை வேகமாக குறைக்க உதவி புரிந்து, உடல் எடையை வேகமாக குறைக்க உதவும்.
- ஒரு கப் நீரை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்து, அதில் சிறிது டீ தூளை சிறிது சேர்த்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை நீக்கும்.
- ஒரு நாளைக்கு 2-3 முறை க்ரீன் டீயைக் குடித்து வந்தால், உடல் எடை வேகமாக குறைவதோடு, உடலும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். இது உடலின் மெட்டபாலிசத்தை துரிதப்படுத்துகிறது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US