கைகளில் உள்ள அதிகப்படியான சதையை குறைக்கும் வேண்டுமா? இந்த பயிற்சியை மறக்கமால் தினமும் செய்திடுங்க
பொதுவாக பெண்கள் தங்களுடைய கைகளில் அதிகப்படியான சதை தொங்குவதை விரும்புவதில்லை. அவ்வாறு சதை தொங்கினால் தங்கள் உடலமைப்பே கெட்டுவிடும் என பெண்கள் நினைப்பதுண்டு.
எனவே, பெண்களின் கைகளில் உள்ள சதையை குறைப்பதற்கான உடற்பயிற்சிகள் ஈடுபட வேண்டும்.
அந்தவகையில் தற்போது கைகளில் உள்ள அதிகப்படியான சதையை குறைக்க கூடிய ஒரு எளிய பயிற்சி ஒன்றை இங்கே பார்ப்போம்.
- முதலில் விரிப்பில் முழங்கால்களைச் சற்று முன்னோக்கி மடக்கியபடி, நேராக நிற்க வேண்டும். கைகளில் டம்பிள்ஸைப் பிடித்து, தலைக்குப் பின்புறம் வைத்தபடி நிற்க வேண்டும்.
- இப்போது, மூச்சை இழுத்துப்பிடித்தபடி, டம் பிள்ஸைத் தலைக்கு மேல் உயர்த்த வேண்டும். பின்னர், மூச்சை வெளியேற்றிபடி, கைகளைப் பின்நோக்கி இறக்கவும்.
- இதேபோல 10 முறை செய்ய வேண்டும். கைகளை உயர்த்தும் போது, மூச்சை நன்றாக இழுத்து, கைகளை இறக்கும்போது மூச்சை வெளியேற்ற வேண்டும்.
- ஆரம்பத்தில் 15 முறையும் பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ள வேண்டும்.
-
கை பகுதியில் அதிகளவு சதை இருப்ப வர்கள் இந்த பயிற்சியை அதிக எண்ணிக்கை செய்ய வேண்டும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.