தொடையில் உள்ள அதிகப்படியான சதையை குறைக்க வேண்டுமா? இந்த எளிய பயிற்சிகளை தொடர்ந்து செய்தாலே போதும்
பொதுவாக நாம் அதிகமாக எடுத்துக்கொள்ளும் கொழுப்பு நிறைந்த உணவுகளால் அந்த கொழுப்பானது நாளடைவில் தொடை பகுதியில் சேர்ந்து தொடையில் அதிகப்படியான சதை உருவாக காரணமாகிறது.
எனவே இவற்றை முடிந்தளவு குறைப்பது நல்லது. அதற்கு ஒரு சில உடற்பயிற்சிகள் உதவுகின்றன. தற்போது அவற்றை பார்ப்போம்.
ஜாக்கிங்
ஜாக்கிங் இது தொடையில் உள்ள சதை குறைய ஒரு எளிமையான உடற்பயிற்சி. ஜாக்கிங் செய்வதற்கு ஜிம்முக்கு போக வேண்டும் என்ற அவசியம் இல்லை.
மேலும் பணம் செலவழிக்க தேவையில்லை. இந்த பயிற்சியை தொடர்ந்து செய்வதால் தொடை ஒரு shape பெறுகிறது அது மட்டும் இல்லாமல் மூச்சினை சீர் செய்யவும் உதவுகிறது.
Half Siting
Photo Credit: iStock Images
ஸ்குவாட்ஸ் தசைகளை குறைக்க உதவுகிறது. இதை எப்படி செய்ய வேண்டும் என்றால் HALF SITTING முறையில் மேற்கொள்ள வேண்டும். இதை செய்வதால் சதைகளை குறைப்பதோடு மட்டும் இல்லாமல் கால்களை வழுவாக்கவும் உதவுகிறது.
நீச்சல்
Monica Pronk/Stocksy
நீச்சல் அடிப்பது உடல் எடையை குறைக்க ஓரு சிறந்த உடற்பயிற்சி. ஒரே நேரத்தில் அனைத்து தசைகளுக்கும் வேலை கொடுக்கும் ஒரே உடற் பயிற்சி நீச்சல். தொடையில் உள்ள அதிகப்படியான சதையை குறைப்பதோடு மட்டும் இல்லாமல் மூச்சினை சீராக வைத்து கொள்ளவும் உதவுகிறது.
Leg Kick
தொடையின் தசையை குறைக்க லெக் கிக் எளிமையான பயிற்சி ஆகும். சப்போர்ட்காக CHAIR அல்லது வேறு எந்த பொருளையோ வைத்து கொள்ளுங்கள். உங்கள் காலினை எவ்வளவு தூரம் பின்னோக்கி தூக்க முடியுமோ அவ்வளவு தூரம் வேகமாக தூக்க வேண்டும். அடுத்த கால் இப்படியே மாறி மாறி குறைந்தது 20 முறை செய்திட வேண்டும்
இந்த முறையை பாலோ செய்து வந்தால் தொடையில் உள்ள சதை குறைய தொடங்கும்.