தொப்பை வெண்ணெய் போல் கரைக்க வேண்டுமா? இந்த மூன்று எளிய பயிற்சிகளை செய்திடுங்க போதும்
இன்றைய காலத்தில் பலரும் தொப்பை பிரச்சினையால் அவஸ்தைப்படுவதுண்டு.
இதனை குறைக்க மணிக்கணக்கில் ஜிம் சென்று உழைத்து வருகின்றது. இருந்தாலும் சிலர் எளியமுறையில் தொப்பை எப்படி குறைக்கலாம் என்று முயற்சி செய்வார்கள்.
அவர்களுக்கு சில எளிய உடற்பயிற்சிகள் உள்ளது. தற்போது அதில் சிலவற்றை இங்கே பார்ப்போம்
இரு கால்களையும் நீட்டி செய்யும் பயிற்சி
முதலில், சாதாரண நிலையில் படுத்துக் கொண்டு, இரண்டு கால்களையும் உயர்த்தவும். இப்போது இரண்டு கால்களையும் முழங்கால்களில் ஒன்றாக மடக்கவும்.
பின்னர் 5 விநாடிகள் கைகளால் கால்களை பிடித்துக் கொள்ளுங்கள். பின், கால்களை நேராக்குங்கள். இதை 10-12 முறை செய்யவும்.
கத்தரிக்கோல் பயிற்சி
சாதாரண நிலையில் படுத்துக் கொண்டு, இரண்டு கால்களையும் உயர்த்தவும். மெதுவாக வலது காலை கீழே கொண்டு வரவும்.
பின்னர் இடது காலை கீழே கொண்டு வரும்போது, வலது காலை உயர்த்தவும். இதை 10-12 முறை செய்யவும்.
பிளாங்க் (Plank)
முதலில் உங்கள் வயிறு தரையில் படுமாறு குப்புற படுத்துக் கொள்ளுங்கள். இப்போது கால்விரல்கள் மற்றும் கைகஐ ஊன்றிக் கொண்டு உடலை உயர்த்தவும்.
இந்த நேரத்தில், உங்கள் உடலை இறுக்கமாக வைத்திருங்கள். இந்த நிலையில் 10 விநாடிகள் இருக்கவும். இதை 4-5 முறை செய்யவும்.