உங்க முடி கரு கருனு அடர்த்தியாக வளர வேண்டுமா? இந்த எண்ணெய்யை தினமும் பயன்படுத்திலே போதும்
இன்றைக்கு பலர் எதிர் கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் கூந்தல் பிரச்சினை முதலிடத்தில் உள்ளது.
இதனை போக்க பலர் கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட எண்ணெய்கள் போன்றவற்றை வாங்கி உபயோகப்படுத்துகின்றனர். உண்மையில் இதனால் பணம் செலவாகுவது தான் மிச்சம்.
ஆயுர்வேதத்தின் படி முடி வளர்ச்சிக்காக பயன்படுத்தும் எண்ணெய்களில் பிருங்கராஜ் எண்ணெய் மிகவும் சிறந்தது.
இது முடி வளர்ச்சியை தூண்டுவ தோடு முடியின் தன்மையையும் மேம்படுத்துகிறது. இதனை வீட்டிலேயே செய்யலாம். தற்போது அவை எப்படி என பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
- தேங்காயெண்ணெய் - 500 மி. லி
- மாட்டுப்பால் - 250 மி. லி(காய்ச்சின பாலை எடுத்துக் கொள்ளுங்கள்)
- தேங்காய் துருவல் - 200 கிராம்
- நெல்லிக்காய் பவுடர் - 50 கிராம்
- கரிசலாங்கண்ணி மூலிகைப் பொடி - 50 கிராம்
- அதிமதுரம் பவுடர் - 50 கிராம்
- திரிபலா பவுடர் - 50 கிராம்
- கற்றாழை ஜெல் - 25 - 50 கிராம்
- செம்பருத்தி பூ பேஸ்ட் - 25-50 கிராம்
தயாரிக்கும் முறை
- நெல்லிக்காய், பிருங்கராஜ், அதிமதுரம், திரிபலா, கற்றாழை ஜெல் போன்ற மூலிகைகளின் பொடிகளை ஒரு அகன்ற பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு மூலிகைகளிலும் 10 கிராம் அளவை தனியாக எடுத்து விட்டு மீதமுள்ள மூலிகைகளை மட்டும் அதில் சேருங்கள். இதனுடன் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து கலந்து கொதிக்க விடுங்கள்.
-
இப்பொழுது தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து 500 மி. லி வரும் வரை வற்ற வைக்க வேண்டும். மிதமான தீயில் வைத்து கொதிக்கும் வரை நன்றாக கிளற வேண்டும். 500 மில்லி லிட்டராக தண்ணீர் குறைந்த உடன் கஷாயத்தை வடிகட்டி தனியாக வைத்து கொள்ளுங்கள்.
-
ஒரு அகன்ற பாத்திரத்தில் 500 மி. லி தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள் ளுங்கள். அதில் வடிகட்டி வைத்துள்ள கஷாயத்தை சேர்த்து பால் சேர்த்துகொள்ளவும்.
- தேங்காய்த்துருவலை மிக்ஸியில் போட்டு அரைத்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அரைத்த தேங்காய் பாலை ஒரு அகன்ற பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- இப்பொழுது செம்பருத்தி பூ பேஸ்ட்டை அதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். மிதமான தீயில் வைத்து இந்த எண்ணெயை நன்றாக கிளறிக் கொண்டே சூடுபடுத்த வேண்டும். எண்ணெய் சலசலப்பு அடங்கும் வரை எண்ணெயை கிளறிவிட்டு கொண்டே இருக்கவும்.
- பிறகு இந்த எண்ணெயை காற்று புகாத கண்ணாடி பாட்டில்களில் சேகரித்து வைக்கலாம். ஒன்றரை வருடம் வரை வைத்திருந்து பயன்படுத்தி வரலாம்.
பயன்படுத்தும் முறை
இந்த பிருங்கராஜ் எண்ணெயை இரவில் தூங்குவதற்கு முன்பு அப்ளை செய்து கொள்ளுங்கள். பிறகு காலையில் எழுந்ததும் தலைக்கு குளிக்க வேண்டும்.
கூந்தலில் இலேசாக சில துளிகள் மட்டுமே எடுத்து பயன்படுத்தி வந்தால் உடனே தலைக்கு குளிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. 2-3 நாட்களுக்கு பிறகு நீங்கள் குளித்துக் கொள்ளலாம். இதுவே அதிகளவு எண்ணெய் பயன்படுத்தும் நாட்களில் அன்றைக்கே தலைக்கு குளிப்பது நல்லது.