16 ஆண்டுகளாக பொலிசாரால் தேடப்பட்டுவந்த நபர்: சிக்கவைத்த ஒலிம்பிக் ஆர்வம்
16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஒருவர், ஒலிம்பிக் போட்டிகளில் தன் நாடு விளையாடுவதைக் காணும் ஆர்வத்தால் பொலிசில் சிக்கினார்.
ஒலிம்பிக் ஆர்வம்
ஸ்லோவேக்கியா நாட்டவரான ஒருவர், திருட்டுக் குற்றங்களுக்காக இத்தாலி பொலிசாரால் தேடப்பட்டுவந்தார். அவர் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

16 ஆண்டுகளாக அவர் தலைமறைவாகியிருந்த நிலையில், குளிர்கால ஒலிம்பிக்போட்டிகளில் தன் நாடு விளையாடுவதைக் காண்பதற்காக இத்தாலிக்கு வந்துள்ளார்.
இத்தாலியிலிருந்த லாட்ஜ் ஒன்றில் அவர் தங்கியிப்பது தெரியவரவே. அவரை பொலிசார் கைது செய்துவிட்டார்கள்.
அவர், தன் நாடான ஸ்லோவேக்கியா, பின்லாந்துடன் ஹாக்கி போட்டியில் விளையாடுவதைக் காண்பதற்காக வந்திருந்தார்.
ஆனால், அவர் போட்டியைக் காணச் செல்லும் முன்பே பொலிசார் அவரை கைது செய்துவிட்டதால், அவரால் போட்டியைக் காணமுடியாமல் போய்விட்டது.
சுவாரஸ்யம் என்னவென்றால், அந்தப் போட்டியில் ஸ்லோவேக்கியா பின்லாந்தை 4க்கு 1 என்ற கோல் கணக்கில் வென்றுவிட்டது!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |