லண்டன் ரயில்களில் பயணிக்கக் கூடும்... ஆபத்தானவர்: தமிழர் தொடர்பில் பொதுமக்களை எச்சரித்த பொலிசார்
கிழக்கு லண்டலில் காப்பகம் ஒன்றில் இருந்து தப்பியுள்ளதாக கூறப்படும் தமிழர் தொடர்பில் மாநகர பொலிசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் நெருங்க வேண்டாம்
எப்போதாவது வன்முறையில் ஈடுபடக் கூடிய நபர் தபோது காப்பகம் ஒன்றில் இருந்து தலைமறைவாகியுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image: Humberside Police
பாலசங்கர் நாராயணன் என்ற அந்த நபர் செப்டம்பர் 21ம் திகதி மாயமானதாக கூறியுள்ள பொலிசார், ஆபத்தானவர், பொதுமக்கள் எவரும் அவரை நெருங்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
43 வயதான பாலசங்கர் நாராயணன் கடைசியாக வெள்ளை மற்றும் நீல வண்ணத்தில் சட்டையுடன் கருப்பு டிராக்சூட் கால்சட்டையும் கருப்பு பேஸ்பால் தொப்பியும் அணிந்து காணப்பட்டதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
லண்டனில் நியூஹாம், கிரீன்ஃபோர்ட், ஹேமர்ஸ்மித், ஹைகேட் மற்றும் இல்ஃபோர்ட் பகுதியிலும் மேற்கு மிட்லாண்ட்ஸ் பகுதியிலும் பாலசங்கர் நாராயணன் காணப்பட வாய்ப்பிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ரயில்களில் பயணிக்க வாய்ப்பு
மேலும், பாலசங்கர் நாராயணன் காப்பகத்தில் இருந்து தப்புவது இது முதல் முறையல்ல என்றே கூறப்படுகிறது. இந்த ஆண்டு துவக்கத்திலும், பொலிசார் இவர் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
Image: Humberside Police
அத்துடன் 2021ல் இவர் ஒருமுறை தொடர்புடைய காப்பகத்தில் இருந்து மாயமாகியுள்ளார் என்றே கூறப்படுகிறது. லண்டன் ரயில்களில் இவர் பயணிக்க அதிக வாய்ப்பிருப்பதாக சந்தேகிக்கும் பொலிசார்,
பொதுமக்களுக்கும் ரயில்வே ஊழியர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், அவரை அடையாளம் காண நேர்ந்தால், உடனடியாக தகவல் அளிக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |