காசாவில் இரவில் இடிந்து விழுந்த சிதைக்கப்பட்ட கட்டிடம்: 21 பேர் உயிரிழப்பு: மீட்பு பணிகள் தீவிரம்
War Damaged Building Collapses in Gaza 21 Dead: காசாவில் இஸ்ரேலிய தாக்குதலில் சிதைக்கப்பட்டிருந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் 21 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
இடிந்து விழுந்த கட்டிடம்
காசாவில் இஸ்ரேலிய படையினரின் வெடிகுண்டு தாக்குதலில் சிதைக்கப்பட்ட கட்டிடத்தில் சில இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்கியிருந்தது.
இந்நிலையில் இந்த கட்டிடம் இரவில் திடீரென இடிந்து விழுந்ததில் 21 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் 14 பேர் வரை படுகாயமடைந்துள்ள நிலையில், டஜன் கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி வருகின்றனர்.
மீட்பு பணி தீவிரம்
கட்டிடம் இடிந்து விழுந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு பணியாளர்கள் வெறும் கைகளால் கட்டிட இடிபாடுகளை அகற்றி வருகின்றனர்.
உயிருடன் இருப்பவர்களை மீட்கும் நம்பிக்கை தங்களிடம் இருப்பதாக காசா நகரின் சிவில் பாதுகாப்பு பிரிவு இயக்குநர் ராயத் அல்-தஹ்ஷான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
காசாவில் உள்ள பெரும்பாலான கட்டிடங்கள் இஸ்ரேலின் வெடிகுண்டு தாக்குதலில் சிதைக்கப்பட்டுள்ளன.
இத்தகைய 2000க்கும் அதிகமான சிதைந்த கட்டிடங்களில் 10,000 பாலஸ்தீனியர்கள் தற்போது தங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |