போர் காரணமாக உக்ரைனில் 100 பில்லியன் டொலர் மதிப்பிலான சொத்துக்கள் அழிப்பு! அதிர்ச்சி தகவல்
உக்ரைனில் ரஷ்ய போர் தாக்குதல் காரணமாக இதுவரையில் 100 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளது.
ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் தலைமை பொருளாதார ஆலோசகர் Oleg Ustenko இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது வர்த்தகம், பொருளாதாரம், உள்கட்டமைப்பு உக்ரைனில் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யப் படைகளை முன்னேற விடாமல் தடுக்க உக்ரைன் ராணுவம் அழித்த சாலை, மேம்பாலம் உள்ளிட்ட நகர உள்கட்டமைப்புகள் மற்றும் ரஷ்யப் படைகளின் குண்டு மழையில் பல்வேறு பகுதிகளை உருக்குலைந்தன.
ஏறத்தாழ 50 சதவீத பொருளாதாரம் சகஜ நிலைக்கு திரும்ப முடியாமல் இருப்பதாகவும், போரை உடனடியாக நிறுத்தாவிட்டல் ஒட்டுமொத்த பொருளாதாரமும் சீரழியும் என்றும் Oleg தெரிவித்துள்ளார்.
இதோடு ரஷ்ய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவைப் புறக்கணிப்பதன் மூலம் மாஸ்கோவின் இரத்தம் படிந்த பணத்திற்கான அணுகலைத் துண்டிக்க ஐரோப்பிய மற்றும் பிற அரசாங்கங்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
உக்ரைனில் இதுவரை 280 கல்வி நிலையங்களை ரஷ்யா ஏவுகணை மற்றும் வெடிகுண்டுகளை வீசி அழித்துள்ளதாக அந்நாட்டின் கல்வி மற்றும் அறிவியல் அமைச்சர் Serhiy Shkarlet கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.