கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு வெளியான எச்சரிக்கை தகவல்!
கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனம் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. குறிப்பாக Omicron, கொரோனா இடத்தை பிடித்து கொண்டு மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவில் இருந்து அடுத்தடுத்து பல மாறுபாடுகள் உருமாறி வருகின்றது. இதையடுத்து பல நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முயற்சி ஆயத்தமாக நடைபெற்று வருகின்றது.
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு சிலருக்கு காய்ச்சல் அல்லது உடல் வலி ஏற்படுகிறது. அது போன்றவர்களுக்கு பாராசிட்டமால் உள்ளிட்ட வலி நிவாரணி மாத்திரைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன.
இந்நிலையில் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பாராசிட்டமால் மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று பாரத் பயோடெக் நிறுவனம் கேட்டு கொண்டுள்ளது.
மற்ற கொரோனா தடுப்பூசிகளை போட்ட பிறகு பாராசிட்டமால் மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களுக்கு தேவையில்லை என்று அதை தயாரிக்கும் பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது.