கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கும் எச்சரிக்கை: வெளியான புதிய ஆய்வு
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்களையும் உருமாறிய கொரோனா வைரஸ் மீண்டும் தாக்கலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகில் சில நாடுகளில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் பிரித்தானியா மற்றும் தென் ஆபிரிக்காவில் உரு மாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவியது.
இதனால் பிரித்தானியாவில் மூன்றாவது முறையாக முழு ஊரடங்கு அமுலுக்கு கொண்டுவரப்பட்டது.
அதே போல் ஐரோப்பிய நாடுகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. உருமாறிய கொரோனா அதிக வீரியம் மிக்கதாக இருப்பதால் அதனை கட்டுப்படுத்துவதற்கான ஆய்வுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மேலும், உருமாறிய கொரோனாவுக்கு எதிராக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்துகளும் பலன் அளிக்காமல் போகலாம் என்று விஞ்ஞானிகள் கவலை தெரிவித்தனர்.
இந்த நிலையில் உருமாறிய கொரோனா வைரஸ் ஏற்கனவே அந்நோயின் பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்களை எளிதாக தாக்க வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தென் ஆபிரிக்காவில் பரவும் உருமாறிய கொரோனா வைரசை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களையும் குணம் அடைந்தவர்களையும் உருமாறிய கொரோனா வைரஸ் மீண்டும் தாக்கலாம்.
தடுப்பு மருந்துகளை செலுத்தி ஆய்வு செய்த போது உருமாறிய கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சிரமம் உள்ளது.
இந்த தரவு உண்மையாக இருந்தால், தொற்று நோயை முடிவுக்கு கொண்டு வருவதில் நாம் நெருக்கமாக இருக்கிறோம் என்ற எண்ணத்தில் இருந்து பொது மக்கள் பின்வாங்க நேரிடும் என நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளனர்.