அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்தால் என்ன நடக்கும் தெரியுமா?
exercise
Fever
Joint Pain
Weight gain
By Kishanthini
உடற்பயிற்சி உடலுக்கு பல நன்மைகளை வழங்கினாலும் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்வது ஆபத்தானதாக கருதப்படுகின்றது.
அந்தவகையில் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதனால் ஏற்படும் பக்கவிளைவுகளின் அறிகுறிகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதனால் நாள்பட்ட சோர்வு உடலுக்கு மட்டுமின்றி மனதுக்கும் சோர்வை ஏற்படுத்தும்.
- அதிகப்படியான உடற்பயிற்சி உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதிக சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பை எதிர்கொண்டால் அது அதிகமாக உடற்பயிற்சி செய்ததால் நோய் எதிர்ப்பு அமைப்பு பலவீனமடைந்திருப்பதற்கான அறிகுறியாக அமையலாம்.
- தூங்கி எழுந்த பிறகும், ஓய்வெடுக்கும் போதும் இதயத்துடிப்பு அதிகமாக இருந்தாலோ, தொடர்ந்து 4-5 நாட்கள் அதே நிலை நீடித்தாலோ அது அதிக உடற்பயிற்சி செய்ததால் அனுபவிக்கும் ஆபத்தின் வெளிப்பாடாகும்.
- அடிக்கடியோ, அதிகமாகவோ உடற்பயிற்சி செய்வது மூட்டு வலி, எலும்பு முறிவு, மென்மையான திசு காயங்கள் போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.
- அதிகமாக உடற்பயிற்சி செய்வது டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவதற்கும், மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலின் அளவு அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும் என்பதால் உடல் பருமன் பிரச்சினை உண்டாகிறது. இந்த ஹார்மோன் மாற்றங்கள் பெரும்பாலும் தசை திசுக்களின் இழப்பு, எடை அதிகரிப்பு மற்றும் அதிகப்படியான தொப்பை கொழுப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையவை.
- நீங்கள் அதிகமாக உடற்பயிற்சி செய்தால் தூக்கமின்மையால் அவதிப்படுவீர்கள். அதிக பயிற்சியினால் தசைகள் அழுத்தத்திற்கு உள்ளாகும். அதனால் தூக்கம் பாதிப்புக்குள்ளாகும்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US