ரஷ்யா, ஜப்பானைத் தொடர்ந்து நியூசிலாந்துக்கும் எச்சரிக்கை! பல தசாப்தங்களில் வலிமையான நிலநடுக்கம்
ரஷ்யா, ஜப்பானைத் தொடர்ந்து நியூசிலாந்து மற்றும் பிற தீவுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தீபகற்பத்தில் நிலநடுக்கம்
உலகின் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஒன்றாக கம்சட்கா தீபகற்பத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் பீதியை கிளப்பியுள்ளது.
கம்சட்கா ஆளுநர் விளாடிமிர் சோலோடோவ் இதுகுறித்து வெளியிட்ட வீடியோவில், "இன்றைய நிலநடுக்கம் கடுமையானது மற்றும் பல தசாப்தங்களாக ஏற்பட்ட நிலநடுக்கங்களில் மிகவும் வலிமையானது" என கூறினார்.
அதே போல் பசிபிக் பெருங்கடலில் உள்ள ரஷ்யாவின் குரில் தீவுகளில் உள்ள முக்கிய குடியேற்றமான செவெரோ-குரில்ஸ்க் கடலோரப் பகுதியை முதல் சுனாமி அலை தாக்கியதாக உள்ளூர் ஆளுநர் வலேரி லிமரென்கோ தெரிவித்தார்.
நியூசிலாந்தை நோக்கி
ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின்படி, சுமார் 30 சென்டிமீற்றர் உயரமுள்ள சுனாமி அலை ஹொக்கைடோவின் கிழக்கு கடற்கரையில் உள்ள நெமுரோவையும் அடைந்தது. இந்த நிலையில், வடக்கு பசிபிக் பிராந்தியத்திலும் சுனாமியை ஏற்படுத்தியது.
மேலும் அலாஸ்கா, ஹவாய், சிலி, சாலமன் தீவுகள் மற்றும் நியூசிலாந்தை நோக்கி தெற்கே உள்ள கடலோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கைகளைத் தூண்டியது.
அத்துடன் ஈக்வடாரின் சில கடலோரப் பகுதிகளில் 3 மீற்றருக்கும் அதிகமான அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |