ஆப்பிள் நிறுவனத்திற்கு அதிர்ச்சி அளித்த கோடீஸ்வரர்., பாதி பங்கை விற்ற அவரது நிறுவனம்..!
உலக பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான வாரன் பஃபெட் (Warren Buffett) Apple நிறுவனத்திற்கு பெரும் அதிர்ச்சியளிக்கும் வகையிலான காரியத்தை செய்துள்ளார்.
உலக பணக்காரர்களின் பட்டியலில் 10-ஆம் இடத்தில் இருக்கும், உலகளாவிய முதலீட்டு வழிகாட்டியான வாரன் பஃபெட், சர்வதேச நிதித் துறையில் நிச்சயமற்ற தன்மையை அடுத்து உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்திற்கு அதிர்ச்சி அளித்தார்.
அவரது பெர்க்ஷயர் ஹாத்வே (Berkshire Hathaway) நிறுவனம், 2024-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஆப்பிள் நிறுவனத்தில் வைத்திருந்து பங்குகளில் பாதியை விற்றுள்ளது.
கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் ஒரு சதவீத பங்குகளை விற்ற பெர்க்ஷயர் ஹாத்வே, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் தனது பங்குகளை 13 சதவீதம் குறைத்தது.
Apple நிறுவனத்தில் பெர்க்ஷயர் ஹாத்வேயின் பங்கு இப்போது 789 மில்லியனில் இருந்து 400 மில்லியன் பங்குகளாகக் குறைந்துள்ளது.
இதன் விளைவாக, ஆப்பிள் நிறுவனத்தில் பெர்க்ஷயர் ஹாத்வேயின் பங்கு சுமார் 2.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.
Bloomberg Billionaires Index-ன் படி, உலக பணக்காரர்கள் பட்டியலில் Warren Buffett 135 பில்லியன் டொலர் சொத்துமதிப்புடன் 10-ஆம் இடத்தில் உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Warren Buffett's Berkshire Hathaway sold nearly half its stake in Apple, Apple Inc.