பள்ளி ஆசிரியையுடன் தொடர்பு., முதல் மனைவிக்கு துரோகம் செய்த கமலா ஹாரிஸின் கணவர்
கமலா ஹாரிஸின் கணவர் டக்ளஸ் எம்ஹாஃப்., தனது முதல் மனைவிக்கு துரோகம் செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸின் கணவர் டக்ளஸ் எம்ஹாஃப் (Douglas Emhoff), தனது முதல் திருமணத்திற்குப் பிறகு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
அமெரிக்க ஊடகமான CNN உடன் பேசிய டக்ளஸ், "எனது முதல் மனைவியின் பெயர் கெர்ஸ்டின் (Kerstin). எங்களுக்கு சில பிரச்சனைகள் இருந்தன. என் தவறுகளுக்கு நான் பொறுப்பேற்று அடுத்த சில ஆண்டுகளில் எங்கள் உறவை மேம்படுத்தினேன்" என்று கூறியுள்ளார்.
ஆனால், பிரித்தானிய ஊடக நிறுவனமான DailyMail வெளியிட்ட அறிக்கையில், டக்ளஸ் தனது குழந்தைகளின் பள்ளி ஆசிரியை நஜேன் நெய்லருடன் (Najen Naylor) தொடர்பு வைத்திருந்ததாக தெரிவித்திருந்தது.
அவரும் கர்ப்பமாக இருந்தார், அதனால் அவருடைய முதல் திருமணம் முறிந்தது. இருப்பினும், பின்னர் குழந்தையை வைத்திருக்க நெய்லர் மறுத்துவிட்டார்.
அந்த நேரத்தில், டக் எம்ஹாஃப் கெர்ஸ்டினுடன் 2 குழந்தைகளை (Cole மற்றும் Ella) பெற்றிருந்தார்.
இந்த விவகாரம் வெளியானதையடுத்து, நெய்லர் தனது பள்ளி ஆசிரியர் பணியை விட்டு விலக நேரிட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டக்ளஸ் மற்றும் கெர்ஸ்டின் 19 வருட திருமணத்திற்குப் பிறகு 2009-இல் விவாகரத்து செய்தனர்.
கமலா ஹாரிஸுக்கும் டக்ளஸுக்கும் முதல் பார்வையிலேயே பிடித்திருந்தது...
2014-ஆம் ஆண்டு கமலா ஹாரிஸ்-டக்ளஸ் எம்ஹாஃப் திருமணம் நடந்தது. இது கமலாவின் முதல் திருமணமும், டக்ளஸின் இரண்டாவது திருமணமும் ஆகும்.
இருவரும் தங்கள் நண்பர்கள் ஏற்பாடு செய்த blind date-ல் சந்தித்தனர். முதல் பார்வையிலேயே கமலா ஹாரிஸை காதலித்ததாக டக்ளஸ் கூறினார்.
டேட்டிங் செல்வதற்கு முன்பே, கமலா கூகுளில் டக்ளஸைப் பற்றி படித்திருந்தாள். 1 வருட உறவுக்குப் பிறகு, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். CBS செய்திகளின்படி, திருமணத்தின் போது டக்ளஸின் கள்ளத்தொடர்பு குறித்து கமலா ஹாரிஸ் அறிந்திருந்தார்.
2020-இல் பைடனின் தேர்தல் பிரச்சாரத்தில் கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது, டக்ளஸ் குறித்து பைடன் குழுவிற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், டக்ளஸின் முதல் மனைவி கெர்ஸ்டினும் டக்ளஸை ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "நாங்கள் இருவரும் பல்வேறு காரணங்களுக்காக எங்கள் திருமணத்தை முடிக்க முடிவு செய்தோம். அவர் ஒரு அற்புதமான தந்தை மற்றும் எனக்கு சிறந்த நண்பர். டக்ளஸ், கமலா மற்றும் நான் நன்றாக பழகுகிறோம், நங்கள் குடும்பமாக மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்." என்று கூறியுள்ளார்
திருமணத்திற்கு முன் மணமகனின் வலிமையை சோதிக்கும் மணமகளின் தாய்.! ஆப்பிரிக்க பழங்குடியினரின் விசித்திரமான வழக்கம்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |