புதிய வீட்டில் புதைந்த மர்மம்! வாஷிங்டன் தம்பதியினருக்கு காத்திருந்த திகில் திருப்பம்!
அமெரிக்காவில் வாஷிங்டனில் புதிய வீடு வாங்கிய தம்பதியினருக்கு கிடைத்த துண்டு சீட்டு பெரும் திகிலை ஏற்படுத்தியுள்ளது.
புது வீடு வாங்கிய தம்பதியினர்
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தைச் சேர்ந்த அனிதா ரெய்னியர் மற்றும் அவரது கணவர், சியாட்டில் நகரின் புறநகரில் அமைந்திருந்த ஒரு புதிய வீட்டை வாங்கியுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் தங்கள் கனவு இல்லத்திற்கு குடிபெயர்ந்த இந்த தம்பதியினர், வீட்டை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப புதுப்பிக்க திட்டமிட்டிருந்தனர்.
அவ்வாறு, சமையலறையை எப்படி மாற்றி அமைப்பது என்று ஆலோசனை செய்து கொண்டிருந்த போது, அங்கே இருந்த ஒரு அலமாரியை அனிதா கவனித்துள்ளார்.
அந்த அலமாரியின் உட்புறத்தில் ஏதோ வித்தியாசமாக இருப்பதை உணர்ந்த அவர், அதை எடுத்துப் பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
அது ஒரு காகிதத் துண்டு. ஆனால் அதில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகள் திகில் திரைப்படக் காட்சிகளைப் போலிருந்தது.
காகிதத்தில் என்ன எழுதியிருந்தது?
அந்த காகிதத்தில், "தரைக்கு அடியில் பார்க்க வேண்டாம்" என்று எழுதப்பட்டிருந்தது.
காகிதத்தின் பின்புறத்தில் "29065300489382" என்ற புதிரான எண் தொடர் ஒன்றும் காணப்பட்டது.
Found this note taped under a panel in this storage cabinet, previous owner just trolling me?
byu/issaquahhighlands inWeird
இந்த விசித்திரமான எண்கள் எதை குறிக்கின்றன என்ற கேள்வியால் குழப்பமடைந்த அந்த தம்பதியினர், இந்த திகிலூட்டும் சம்பவத்தை சமூக வலைத்தளமான ரெடிட்டில் பதிவேற்றினர்.
அலமாரியின் ஒரு தட்டில் இந்தக் குறிப்பை கண்டேன், முன்னாள் உரிமையாளர் என்னை ட்ரோல் செய்கிறாரா?" என்று அவர்கள் கேள்வியெழுப்பியவாறு அந்த புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
இந்த பரபரப்பான சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |