வாஷிங்டன் காகித ஆலையில் வெடித்த ரசாயன தொட்டி: 1 பலி, 9 பேரை காணவில்லை
அமெரிக்காவின் காதிக ஆலையில் ஏற்பட்ட வெடிப்பு விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காகித ஆலையில் வெடிப்பு விபத்து
வாஷிங்டன் மாகாணத்தில் லாங்விவ் உள்ள காகித ஆலையில் திடீரென ரசாயன தொட்டி வெடித்ததில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்தனர்.
இந்த ரசாயன தொட்டி வெடிப்பு விபத்தில் இதுவரை ஒருவர் உயிரிழந்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் 9 பேர் வரை காணாமல் போய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காயமடைந்த தொழிலாளர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரம், ரசாயன தொட்டி வெடிப்பு விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |