பும்ரா இல்லை; இரண்டாவது டெஸ்டில் களமிறங்கிய தமிழக வீரர்
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் களமிறங்கியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் தொடங்கியுள்ளது.
வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு இந்த டெஸ்டில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக தமிழக ஆல்ரவுண்டர் வீரரான வாஷிங்டன் சுந்தர் (Washington Sundar) சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும் ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக நிதிஷ் குமார் ரெட்டி அணியில் இணைந்து விளையாடுகிறார். நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி இந்திய அணி துடுப்பாட்டத்தை தொடங்கியது. கே.எல்.ராகுல் 2 ஓட்டங்கள் எடுத்த நிலையில் கிறிஸ் வோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |