வாணவேடிக்கை காட்டிய வாஷிங்டன் சுந்தர்! 30 பந்துகள் 56 ஓட்டங்கள் விளாசல்
TNPL தொடரில் சிஎச்சேம் மதுரை பாந்தர்ஸ் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தியது.
வாஷிங்டன் சுந்தர் ருத்ரதாண்டவம்
சேலம் SCF மைதானத்தில் நடந்த TNPL டி20 போட்டியில் மதுரை மற்றும் சேலம் அணிகள் மோதின. சேப்பாக் கில்லீஸ் நாணய சுழற்சியில் வென்று பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி மதுரை பாந்தர்ஸ் அணி முதலில் துடுப்பாடியது. தொடக்க வீரர்கள் சொதப்பிய நிலையில், 6வது விக்கெட்டில் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் எதிரணி பந்துவீச்சை துவம்சம் செய்தார்.
குறிப்பாக, சிக்ஸர்களை பறக்கவிட்டு ருத்ரதாண்டவம் ஆடிய அவர், ஆட்டமிழக்காமல் 30 பந்துகளில் 56 ஓட்டங்கள் குவித்தார். இதில் 5 சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடங்கும்.
சேப்பாக் அணி படுதோல்வி
இதன்மூலம் மதுரை அணி 141 ஓட்டங்கள் எடுத்தது. சரவணன் 17 பந்துகளில் 22 ஓட்டங்கள் எடுத்தார். அபராஜித், எம்.சிலம்பரசன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதன் பின்னர் களமிறங்கிய சேப்பாக் கில்லீஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 129 ஓட்டங்களே எடுத்ததால் தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக ஜெகதீசன் 35 ஓட்டங்களும், அபராஜித் 33 ஓட்டங்களும் எடுத்தனர். மதுரை அணியின் தரப்பில் அஜய் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
?? ???? ? ????????! ???? ? ?????! Siechem Madurai Panthers stun the defending champions in a low scoring thriller.#TNPL #TNPL2023 #SiechemMaduraiPanthers #Madurai #PoduSakkaPodu #TamilNaduCricket pic.twitter.com/nwtRHDdHO1
— Siechem Madurai Panthers (@maduraipanthers) June 26, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |