இந்திய அணியை அசிங்கப்படுத்திய மைக்கல் வாகனுக்கு...சரியான பதிலடி கொடுத்த முன்னாள் வீரர்!
நியூசிலாந்து அணிக்கெதிரான உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டியின் முதல் நாள் மழையால் பாதிக்கப்பட்டது குறித்து, இங்கிலாந்து முன்னாள் மைக்கல் வாகன் கிண்டல் செய்யும் வகையில் டுவிட் செய்திருந்ததால், அதைக் கண்ட இந்திய அணியின் முன்னாள் வாசிம் ஜாபர் பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடருக்கான இறுதிப் போட்டி, நேற்று இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் நடைபெற்றது.
இதில், நேற்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. இதனால், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கல் வாகன், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்தியா அசிங்கப்படுவதை வானிலை காப்பாற்றிவிட்டது என்று கிண்டல் செய்யும் வகையில் டுவிட் செய்திருந்தார்.
I see India have been saved by the weather …. ? #WorldTestChampionship
— Michael Vaughan (@MichaelVaughan) June 18, 2021
இது இந்திய ரசிகர்கள் பலருக்கும் கடும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் டுவிட் செய்துளள் அதில், மற்ற அணிகள் இந்தியா நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியை வேதனையுடன் பார்க்கும் வகையிலான மீம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
Meanwhile rest of the teams watching the #WTCFinals #iykyk ? https://t.co/MchOGlM2Ja pic.twitter.com/JBbMJcr1fU
— Wasim Jaffer (@WasimJaffer14) June 18, 2021
அதாவது, டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற முடியாத நீங்க எல்லாம் எதுக்கு பேசுறீங்க என்ற வகையிலேயே வாசிம் ஜாபரின் இந்த டுவிட்டை பதிவிட்டுள்ளதாக கூறி, இந்திய ரசிகர்களும் இதை வைரலாக்கி வருகின்றனர்.