CSKயின் தோல்விகளுக்கு தோனி காரணமில்லை: இதுதான் பிரச்சனை..முன்னாள் வீரர்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விகளுக்கு எம்.எஸ்.தோனி காரணமில்லை என, இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.
CSK தொடர் தோல்வி
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து, புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
அணியின் துடுப்பாட்டம் பலவீனமாக இருக்கும் நிலையில், எம்.எஸ்.தோனிதான் தோல்விகளுக்கு காரணம் என ரசிகர்கள் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் பொறுமையாக ஆடிய தோனி, 26 பந்துகளில் 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 30 ஓட்டங்கள் எடுத்தார்.
வாசிம் ஜாபர்
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் CSKயின் தோல்விகளுக்கு தோனி காரணமில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், "சென்னை அணி முன்கூட்டியே விக்கெட்டுகளை இழந்து வருகிறது. ஃபார்ம் அல்லது ஷாட் தேர்வுகள் அல்லது அணித்தேர்வு உட்பட எதுவுமே சென்னையில் அணியில் சரியாக இல்லை.
அவர்கள் அதிகமான வீரர்களை மாற்றி மாற்றிப் பயன்படுத்துவதால், நாம் அணியில் இருப்போமா இல்லையா என்ற சந்தேகம் வீரர்களிடம் எழுந்துள்ளது.
பொதுவாக சென்னை அணியை பார்க்கும்போது இது நமக்குப் பழக்கமில்லாத ஒன்றாக இருக்கலாம். வழக்கமாக, அவர்கள் நிலையானவர்கள். நல்ல முடிவெடுக்கும் அணி.
இந்த நேரத்தில் அணி சற்று பதட்டமாக இருப்பதுபோல் தெரிகிறது. அவர்களின் டாப் ஆர்டர் சரியாக செயல்படவில்லை.
தூபே விரைவில் ஆட்டமிழந்தால் அவர்கள் மிக விரைவாக விக்கெட்டுகளை இழப்பது போல் தெரிகிறது. அவர்கள் உண்மையில் ஆட்டத்தில் பின்தங்கியிருப்பதாக உணர்கிறார்கள்.
அவர்கள் முயற்சிப்பதுபோல் கூட தெரியவில்லை. அந்த அணுகுமுறை எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
கடந்த இரண்டு போட்டிகளிலும் அவர்கள் மிக விரைவில் ஆட்டத்தை இழந்துவிட்டனர். அதுதான் சென்னை அணியின் தோல்விக்கு காரணமாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |