வாயில் வைத்ததும் கரையும் வட்டலப்பம்.., இலகுவாக எப்படி செய்வது?
வட்டலப்பம் இலங்கையில் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு வகையாகும்.
இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அந்தவகையில், வாயில் வைத்ததும் கரையும் வட்டலப்பத்தை எப்படி வீட்டிலேயே செய்யலாம் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கருப்பட்டி- ¼kg
- தேங்காய் பால்- 300ml
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
- முட்டை- 6
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் கருப்பட்டியை துருவி சேர்த்து அதில் தேங்காய் பாலை சேர்த்து நன்கு கலந்து கருப்பட்டியை கரைத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் முட்டை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து தேங்காய் பாலுடன் கலந்து வைத்த முட்டை சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
இதற்கடுத்து இதனை ஒரு அகலமான பாத்திரத்தில் வடிகட்டி எடுத்து மூடி போட்டு மூடிக்கொள்ளவும்.
இறுதியாக அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் சேர்த்து சூடானதும் கலந்து வைத்த பாத்திரத்தை உள்ளே வைத்து மூடவும்.
பின்னர் இதனை அரை மணி நேரம் வேகவைத்து எடுத்தால் சுவையான வட்டலப்பம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |