12 படம் பார்த்தால்…2000 அமெரிக்க டொலர் பரிசு: சினிமா ரசிகர்களுக்கான அரிய வாய்ப்பு
வெவ்வேறு ஆண்டுகளில் வெளியான 12 ஹாலிடே படங்களை பார்த்து வரிசை படுத்துபவர்களுக்கு 2000 டொலர் பரிசாக வழங்க இருப்பதாக BloomsyBox நிறுவனம் அறிவித்துள்ளது.
அசத்தல் அறிவிப்பு
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அமெரிக்காவில் BloomsyBox என்ற நிறுவனம் அசத்தலான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது, 12 ஹால்மார்க் கிறிஸ்மஸ் ஹாலிடே படங்களை பார்த்து அவற்றை தரவரிசைப் படுத்தும் நபருக்கு சுமார் 2000 அமெரிக்க டொலரை பரிசாக வழங்க இருப்பதாக சப்ஸ்கிரிப்ஷன் பாக்ஸ் நிறுவனமான BloomsyBox அறிவித்துள்ளது.
வெவ்வேறு ஆண்டுகளில் வெளியான 12 கிறிஸ்துமஸ் திரைப்படங்களை பார்த்து அந்த படங்கள் தொடர்பான கருத்துகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என BloomsyBox நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 1.66 லட்சம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்த படங்களை பார்க்கும் முறைக்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அரிய வாய்ப்பை பெற்ற அதிர்ஷ்டசாலி ஒவ்வொரு படத்தையும் பார்த்து, அதில் ஃபெஸ்ட்டிவிட்டி ஃபேக்டர், கெமிஸ்ட்ரி செக், எமோஷ்னல் இம்பேக்ட் மற்றும் படத்தை மீண்டும் பார்க்க வேண்டும் என தோன்றும் ஆசை போன்ற பல விஷயங்களின் அடிப்படையில் படங்களுக்கு தரவரிசை வழங்க வேண்டும்.
மேலும் படங்கள் தொடர்பான தங்களது கருத்தையும் இன்ஸ்டாகிராமில் பகிர வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த அரிய வாய்ப்பை பெறும் நபருக்கு மேலும் பல சலுகைகள் வழங்கப்பட்ட இருப்பதாக BloomsyBox நிறுவனம் அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |