வீட்டில் இருந்தபடியே அயோத்தி ராமர் கோவிலுக்கு 360 டிகிரி சுற்றுப்பயணத்தை வழங்கும் Jio
இந்தியாவில் ஏராளமான பக்தர்கள் அயோத்திக்குச் சென்று ராமர் கோவிலை காண ஆசைப்படுகின்றனர்.
ஆனால் பெரும்பாலானோருக்கு, நெரிசல், டிக்கெட் விலை, விடுமுறை இல்லாதது போன்ற காரணங்கள் தடையாக இருக்கின்றன.
அத்தகைய நபர்களுக்காக, Jio நிறுவனம் Ram Mandir virtual tour அனுபவத்தை வீட்டிலேயே கொண்டு வருகிறது.
இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் சேவை வழங்குநரான ஜியோ தனது 'We Care' திட்டத்தின் ஒரு பகுதியாக ராமர் கோவிலின் மெய்நிகர் தரிசனத்தை வழங்குகிறது.
இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 360 டிகிரி விர்ச்சுவல் அனுபவத்தின் மூலம் அயோத்தி ராமர் கோவிலை சுற்றிச் சுற்றி வரலாம்.
நிறுவனத்தின் பிரபலமான வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களான JioTV மற்றும் JioTV+ ஆகியவை இந்த தனித்துவமான மெய்நிகர் பயணத்தை அனைத்து ஜியோ பயனர்களுக்கும் வழங்குகின்றன.
கோயிலின் புனிதமான மண்டபங்களுக்குள் நிற்பது போல ஒவ்வொரு கோணத்திலும் கோவிலை கண்டு அனுபவிக்க இது அனுமதிக்கிறது.
JioDive பயனர்கள் JioImmerse செயலியைப் பயன்படுத்தி virtual realityயில் காணலாம். இந்த விர்ச்சுவல் சுற்றுப்பயணம், இந்த வரலாற்றுச் சின்னத்தின் ஆன்மீகம் மற்றும் முக்கியத்துவத்தை, இருப்பிடத்தைப் பொருட்படுத்தாமல், அனைத்து இந்தியர்களையும் அனுபவிக்க அனுமதிக்கிறது.
360 Degree virtual tourல் என்ன அடங்கும்?
அயோத்தி ராமர் கோவிலில் முதன்முதலில் 360 VR தரிசனத்தை Jio அறிமுகப்படுத்தியுள்ளது.
ராமர் கோவிலின் 360 Degree virtual tour கோவிலின் சிக்கலான கட்டிடக்கலை, நேர்த்தியான செதுக்கல்கள் மற்றும் அமைதியான சுற்றுப்புறங்களின் படங்களைக் கொண்டுள்ளது.
கோயிலின் கருவறை, பிரதான பிரார்த்தனை மண்டபம் மற்றும் முற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு அறைகளை பயனர்கள் சுற்றி வர முடியும்.
ராமர் கோவிலின் 360 டிகிரி மெய்நிகர் சுற்றுப்பயணம் JioTVஇல் பிரத்தியேகமாக கிடைக்கும், இது இந்தியாவில் உள்ள அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களுக்கும் இந்த அனுபவத்தை வழங்குகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Jio 360 Degree virtual tour of Ram Mandir, Ramar Temple 360 Degree virtual tour, Ram Temple Virtual Reality Tour, JioTV, Jio, JioDive, JioImmerse