மெஸ்ஸி மீது தண்ணீர் பாட்டில் வீச்சு! கட்டியணைக்க வந்தவரை மடக்கிய காப்பாளர்..பரபரப்பு சம்பவங்கள் (வீடியோ)
லியோனல் மெஸ்ஸி மீது தண்ணீர் போத்தல் வீச்சு மற்றும் ரசிகர் கட்டியணைக்க முற்பட்டது ஆகிய இரண்டு சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.
போத்தல் வீச்சு
MLS தொடரில் இன்டர் மியாமி அணி 3-1 என்ற கோல் கணக்கில் LAFC அணியை வீழ்த்தியது. போட்டி முடிந்ததும் நட்சத்திர வீரர் மெஸ்ஸி மைதானத்தை விட்டு வெளியேறினார்.
அப்போது தண்ணீர் போத்தல் அவர் மீது வீசப்பட்டது. அதிர்ஷ்டவசமாக மெஸ்ஸி மீது போத்தல் படவில்லை. எனினும், மெஸ்ஸி சற்று பதற்றமடைந்தார்.
அதேபோல் அவரது பின்னால் வந்த பாதுகாவலர் நடுங்கிப்போனார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
Who threw a water bottle at Messi man ?
— USMNT Only (@usmntonly) September 4, 2023
(via @axedd11) pic.twitter.com/r9ZrXY5y3n
கட்டிப்பிடிக்க வந்த ரசிகர்
மேலும் ஆட்டத்தின் போது ஒரு சம்பவமும் நடந்தது.
73வது நிமிடத்தில் பார்சிலோனா அணி ஜெர்சியை அணிந்திருந்த ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்தார்.
அவர் நேராக மெஸ்ஸியை கட்டிப்பிடிக்க முயன்றபோது பாதுகாவலர் அவரை மடக்கிப் பிடித்தார். பின்னர் அவர் வெளியே அனுப்பப்பட்டார்.
இதுவும் மைதானத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |