நாட்டு மக்களுக்கு தண்ணீர் கட்டுப்பாடுகள்.. வேறொரு நாட்டுக்கு தண்ணீரை விற்பதா? சுவிஸ் மக்கள் கோபம்
கோடையில் தண்ணீர் தட்டுப்படு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சுவிஸ் மக்கள் தங்கள் கார்களைக் கழுவவும், தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சவும் முடியாத நிலை காணப்படுகிறது.
சீனாவுக்கு தண்ணீர் விற்க திட்டமிட்டுள்ள சுவிஸ் மாகாணம்
இப்படிப்பட்ட ஒரு சூழலில், Valais மாகாணத்திலிருந்து தண்ணீர் எடுத்து போத்தல்களில் அடைத்து சீனாவுக்கு விற்பனை செய்ய சீன நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Valais மாகாணத்திலுள்ள Turtmann என்ற இடத்தில், நிமிடம் ஒன்றிற்கு 1,600 லிற்றர் தண்ணீர் வழங்கப்பட உள்ளதாம்.
மக்கள் எதிர்ப்பு
கோடை நெருங்கும் நிலையில், சுவிஸ் மக்களுக்கே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற நிலை உள்ளபோது, சீனாவுக்கு தண்ணீர் விற்க திட்டமிட்டுள்ள விடயம் உள்ளூர் மக்களுக்கு பிடிக்கவில்லையாம்.
மறுபக்கமோ, சுவிட்சர்லாந்து என்றாலே பல நாட்டு மக்கள் அன்னாந்து பார்க்கும் நிலையில், அந்நாட்டிலிருந்து வரும் தண்ணீர் சீனாவில் நன்றாக விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், தண்ணீரை போத்தல்களில் அடைக்கும் நிறுவனத்தால் மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இதுபோல தண்ணீரை போத்தல்களில் அடைத்து விற்பனை செய்வதற்காக செலவிடப்படும் பணத்தில் வெறும் பாதி பணத்தை கொண்டே, உலகிலுள்ள ஒவ்வொருவருக்கும் குடிதண்ணீர் வழங்க முடியும் என்கிறது நேற்று வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் அறிக்கை ஒன்று.