அரசு பேருந்துக்குள் பெய்த மழை! குடை பிடித்தபடி ஓட்டும் சாரதி (வீடியோ உள்ளே)
இந்திய மாநிலம், மகாராஷ்டிராவில் அரசு பேருந்தின் உள்ளே மழை தண்ணீர் ஒழுகியதால், பேருந்து ஓட்டுநர் குடை பிடித்து ஒட்டிய அவலம் நடந்துள்ளது.
அரசு பேருந்தின் அவலம்
மகாராஷ்டிரா மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள அரசு பேருந்து மோசமான நிலையில் காணப்படுகிறது.
அந்த பேருந்தில் தான் இந்த அவலம் நடந்துள்ளது. அங்கு, இயக்கப்படும் ஒரு அரசு பேருந்தின் உள்ளே மழை தண்ணீர் ஒழுகியதால் குடை பிடித்தவாறே ஓட்டுநர் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வைரல் வீடியோ
சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவில், அரசு பேருந்தின் உள்ளே தண்ணீர் ஒழுகுகிறது. அதில் நனையாமல் இருக்க பேருந்து ஓட்டுநர் குடை பிடித்தவாறே பஸ்ஸை ஓட்டுகிறார்.
மழை நீர் ஒழுகிய இந்த பேருந்து கட்சிரோலி அகேரி டிப்போவுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.
यह वीडियो गढ़चिरौली के अहेरी का है !
— Mumbai Congress (@INCMumbai) August 25, 2023
बारिश होने पर बस की छत टपकने से यह बात सामने आई है कि ड्राइवर बस में छाता लेकर बस चला रहा था!
यह हालत होगई है महाराष्ट्र के @msrtcofficial बस सेवा की, यात्रियों की सुरक्षा अब उपरवाले के भरोसे है!
वीडियो: @mumbaitak #Maharashtra #Gadchiroli pic.twitter.com/z5evosrfk6
மேலும், அரசு பேருந்தை சரிசெய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால், பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பாதுகாப்பு குறித்த கவலையும் எழுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |