Wayanad by-election: 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை
வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.
பிரியங்கா காந்தி முன்னிலை
கேரளாவின் வயநாடு மற்றும் மகாராஷ்டிராவின் நாந்தெட் ஆகிய தொகுதிகளில் கடந்த 19-ம் திகதி அன்று இடைதேர்த்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிட்டார்.
முதல் முறையாக தேர்தல் அரசியலில் நுழைந்த பிரியங்கா காந்திக்கு மக்கள் ஆதரவு எப்படி இருக்க போகிறது என்று பேசப்பட்டு வந்தது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில், வயநாடு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே தற்போது வரை பிரியங்கா காந்தி முன்னிலை வகித்து வருகிறார்.
காலை 9.45 மணி நிலவரப்படி 51,930 வாக்குகளை பெற்ற பிரியங்கா காந்தி, காலை 10.30 மணி நிலவரப்படி 1,65,487 வாக்குளை பெற்றுள்ளார். அதாவது, 1,08,558 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
அவரை எதிர்த்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட சத்யன் மோகேரி 56,929 வாக்குகளும், பாஜக சார்பில் போட்டியிட்ட நவ்யா ஹரிதாஸ் 31,018 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |