சோகத்தில் மூழ்கிய கடவுளின் தேசம்.., களத்தில் இறங்கி உதவும் மலையாள சினிமா பிரபலங்கள்
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
வயநாடு நிலச்சரிவு
இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 185 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கிய 1000 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இதில், நிலச்சரிவில் சிக்கிய 100 பேரின் நிலை குறித்து இன்னும் தெரியவில்லை. தொடர்ந்து 2-வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
4 குழுக்களாக 150 மீட்புப்படையினர் மீட்புப்பணியை செய்து வருகின்றனர். மேலும், அங்குள்ள பகுதியில் இருக்கும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை இந்திய ராணுவம் ஹெலிகாப்டர்கள் மூலம் வழங்கி வருகின்றனர்.
மலையாள நடிகை, நடிகைகள்
அதோடு, தன்னார்வலர்களும் சேர்ந்து மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் மலையாள நடிகை மற்றும் நடிகர்கள் களத்தில் இருக்கும் மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
அந்தவகையில், மலையாள நடிகை நிகிலா விமல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்துடன் (DYFI) சேர்ந்து மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை கொடுப்பதற்கு உதவி செய்து வருகிறார்.
மேலும், மலையாள நடிகை, நடிகர்களான உன்னி முகுந்தன், மஞ்சு வாரியர், ஷான் நிகம் ஆகியோரும் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கும், களத்தில் இறங்கி உதவிகளை செய்வதற்கும் குழுவாக இறங்கி செயல்பட தங்களுடைய சமூக வலைதளங்களில் அழைப்பு விடுத்துள்ளனர்.
#NikhilaVimal DYFI യുടെ നേതൃത്വത്തിൽ വയനാട്ടേക്ക് വേണ്ട ആവശ്യ സാധനങ്ങൾ ശേഖരിക്കുന്ന തളിപ്പറമ്പ കളക്ഷൻ സെൻ്ററിൽ ഈ രാത്രിയിലും സജീവം ❤️ pic.twitter.com/2Z5PHMr4sf
— muzz? (@MushtieQ) July 30, 2024
அதுமட்டுமல்லாமல், முன்னணி நடிகர்களான மம்மூட்டி, மோகன் லால், பிரித்திவிராஜ் ஆகியோர் தங்களது ரசிகர் அமைப்பு மூலம் உதவிகளை செய்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |