இஸ்ரேலை தாக்கினால் நேரடியாக களத்தில் இறங்குவோம்... அமெரிக்கா விடுத்துள்ள வெளிப்படையான எச்சரிக்கை
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால், நேரடியாக களத்தில் இறங்க அமெரிக்க ராணுவம் தயாராக இருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இஸ்ரேல் காசா பிரச்சினையில் தலையிடும் இன்னொரு அமைப்பு
இஸ்ரேல் காசா போர் துவங்கியதிலிருந்தே, லெபனானிலிருக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா என்னும் போராளிக்குழு இஸ்ரேலுடன் உரசிக்கொண்டே இருக்கிறது.
இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தியதில் மூன்று குழந்தைகள் உட்பட நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறி ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலை தாக்கியதில் இஸ்ரேல் தரப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பழிவாங்குவோம் என்றும் ஹிஸ்புல்லா மிரட்டியுள்ளது.
அமெரிக்கா வெளிப்படையாக எச்சரிக்கை
இந்நிலையில், இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால், அமெரிக்க ராணுவம் நேரடியாக களத்தில் இறங்கத் தயாராக உள்ளது என ஈரானையும் ஹிஸ்புல்லா அமைப்பையும் நேரடியாகவே எச்சரித்துள்ளது அமெரிக்கா.
ஏற்கனவே, அமெரிக்கா விமானம் தாங்கிக் கப்பல்களை மத்தியதரைக்கடல் பகுதிக்கு அனுப்பியுள்ளது.
இதற்கிடையில், ரஷ்ய கூலிப்படையான வாக்னர் குழு, ஹிஸ்புல்லா அமைப்புக்கு உதவ முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், பிரச்சினை பெரிதாகக்கூடும் என பல நாடுகள் கவலையடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |