எங்களுக்கு இலங்கையை விட்டு வெளியேறும் எண்ணம் அறவே இல்லை! நாமல் ராஜபக்ச
இலங்கையை விட்டு வெளியேறும் எண்ணம் அறவே இல்லை என எம்.பி.நாமல் ராஜபக்ச திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக, திங்கட்கிழமை காலி முகத்திடலில் அமைதியான போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, எம்.பி.நாமல் ராஜபக்ச உட்பட 17 பேர் வெளிநாடு பயணிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்தது.
இந்நிலையில் எம்.பி.நாமல் ராஜபக்ச ட்விட்டரில் பதிவிட்டதாவது, கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற துரதிஷ்டவசமான நிகழ்வுகள் தொடர்பாக நடைபெறும் எந்தவொரு விசாரணைக்கும் எனது முழு ஒத்துழைப்பை வழங்குவேன்.
பிரதமராக தயார்! நிபந்தனைகளுடன் அதிபர் கோட்டாபயவுக்கு சஜித் பிரேமதாச கடிதம்
எனது தந்தை மகிந்த ராஜபக்சவுக்கோ, எனக்கோ நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் அறவே இல்லை. அனைத்து பொய் குற்றச்சாட்டுகளையும் நேர்மையாக நாம் சந்திக்க தயார் என தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்பு அலரி மாளிகையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட மகிந்த ராஜபக்ச, தற்போது திருகோணமலையில் உள்ள கடற்படை முகாமில் தங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.